படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 4 நிமிடங்கள்

ph 01Vijayakumar (40) was a rowdy in Bangalore since 1989.  Though he does his murderous business under the wrap of real estate and building contract business, he maintained a gang of rowdies and criminals.

In Bangalore alone there were 5 police cases against him related to murder.  There are another 32 cases which includes abduction, money extraction and similar for such heinous crimes.

As per the Bangalore police advice, he moved his place of living to Vellore few years ago.  But his business compulsions forced him to come back near Bangalore and he opted to live in Hosur in Arasanatti area.

As he was against another rowdy gang headed by a person named Kutty and already he has attempted Kutty’s life, in which Kutty managed to escape.

Day before yesterday, he has gone to Bangalore.  Kutty gang has noticed Vijay and they fixed the target by alerting the members of the gang.

Though the opponent gang chased Vijay from Chandapuram of Bangalore, the right location they got to kill Vijay was near SIPCOT, on NH 7.

The murder has sent shock waves among public in Hosur.

ph 02

ஓசூரில் நடுரோட்டில்  வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பற்றி பரபரப்பு தகவல்கள் பழிக்கு பழியாக மற்றொரு ரவுடி தீர்த்து கட்டிய கொடூரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). ரியல் எஸ்டேட் தொழில், கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிப்காட்டில் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

பெங்களூரில் இருந்து சொகுசு காரில் வந்த அவரை ஒரு கும்பல் வழிமறித்து காரின் கண்ணாடியை உடைத்து கண்ணில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி.கண்ணம்மாள், ஓசூர் டி.எஸ்.பி.கோபி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

கொலை செய்யப்பட்ட விஜயகுமார் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் ஆவார். இவர் மீது 5 கொலைகள் உள்பட 32 வழக்குகள் உள்ளன.

அதில் ஆள்கடத்தல், கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் அடங்கும். கடந்த 1989ம் ஆண்டு முதல் அவர் 20 ஆண்டுகளாக பெங்களூரில் ரவுடியாக வலம் வந்தவர் ஆவார். இவருக்கு கீழ் கூட்டாளிகள் சிலர் உள்ளனர்.

அவர்களுக்கும், அதே பெங்களூர் பனசுவாடியை சேர்ந்த குட்டி என்கிற திருக்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதத்தில் குட்டியின் கூட்டாளி தீர்த்து கட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து பழிக்கு பழியாக 2 தரப்பிலும் கொலைகள் நடந்தன. இதில் பலர் கொலை செய்யப்பட்டனர்.

இதனால் விஜயகுமாருக்கு எதிரிகள் அதிக அளவில் உருவானார்கள். இதையடுத்து கர்நாடகா போலீசார் அவரை அந்த மாநிலத்தை விட்டு வெளியேறுமாறும், அவ்வாறு செல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என கூறினார்கள். இதையடுத்து விஜயகுமார், கடந்த 2009ம் ஆண்டு கர்நாடகாவை விட்டு வெளியேறினார்.

கடந்த 4 ஆண்டுகளாக வேலூரில் இருந்த அவர், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஓசூர் அரசனட்டியில் குடும்பத்துடன் குடியேறினார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விஜயகுமார் தரப்பு ரவுடிகளும், குட்டி தரப்பு ரவுடிகளும் மோதிக் கொண்டனர். இதனால் விஜயகுமார் குட்டியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். கடந்த ஆண்டு சித்ரதுர்கா கோர்ட்டிற்கு வந்த குட்டி மீது விஜயகுமாரின் கூட்டாளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குட்டி உயிர் பிழைத்தார். இதையடுத்து விஜயகுமாரை தீர்த்து கட்ட குட்டி திட்டமிட்டார். 

இந்த நிலையில் பெங்களூர் ரெசிடன்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் ஒன்வே கன்னட படத்திற்கு கேசட் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் பங்கேற்க விஜயகுமார் தனது காரில் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு சென்றார். அங்கு அவர் வந்ததை குட்டியின் கூட்டாளிகள் பார்த்தனர்.  இது தான் சரியான தருணம். இந்த நேரத்தில் விஜயகுமாரை தீர்த்து கட்டி விட வேண்டியது தான் என்று அவர்கள் திட்டமிட்டனர்.

விழா முடிந்ததும் விஜயகுமார், ஆனேக்கல்லைச் சேர்ந்த நஞ்சுண்டா, சந்தாபுரத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் ஆகியோருடன் ஊருக்கு காரில் புறப்பட்டார். அவர்கள் 2 பேரும் சந்தாபுரத்தில் இறங்கி கொண்டனர். இதையடுத்து விஜயகுமார் மட்டும் காரை ஓசூருக்கு ஓட்டி வந்தார். இதை பார்த்த குட்டியின் கூட்டாளிகள் காரில் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஓசூர் சிப்காட் பகுதியில் விஜயகுமாரின் கார் வந்ததை கண்டு காரை சுற்றி வளைத்து கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் மிளகாய் பொடியை விஜயகுமார் மீது தூவினார்கள். இதில் அவர் நிலைதடுமாறி தப்பி ஓடினார்.

அவரை அந்த கும்பல் சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு தப்பி சென்றார்கள். மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட விஜயகுமாரின் உடல் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை பார்ப்பதற்காக விஜயகுமாரின் கூட்டாளிகள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு வந்தனர்.
இந்த கொலையில் பெங்களூர் பிரபல ரவுடி குட்டி அவரது கூட்டாளிகள் 10க்கும் மேற்பட்ட ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.