படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

பொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ அமைப்பு சார்பில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

ஒசூரிலுள்ள தன்னார்வலர்கள் அமைப்பினர் ஒவ்வொரு ஆண்டும் விடுதலை நாள், குடியரசு நாள் ஆகிய நாட்களில் குருதி கொடை முகாம்களை நடத்தி பொதுமக்களுக்கு நாட்டுப்பற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

நாட்டின் விடுதலைக்காக நம் முன்னோர்கள் சிந்திய குருதி போல, நமது குருதியும் உயிர் காக்கும் வகையில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 72வது விடுதலை நாளை முன்னிட்டு ஒசூரிலுள்ள மீரா திருமண மண்டபத்தில் தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.

இதில் காலை முதலே ஏராளமான தன்னார்வலர்கள் குருதிக்கொடை வழங்கினர்.

சுமார் 150 முதல் 200 பேர் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதி வழங்கினர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் பெறப்பட்ட குருதி அனைத்தும் பெங்களுரிலுள்ள நாராயண இருதாலாயா மருத்துவமனை மற்றும் அரசு மருத்துமனைகளில் உள்ள குருதி சேமிப்பு வங்கியில் வழங்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளார்கள் தெரிவித்தனர்.