படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூர் கிருட்டிணகிரி நாட்டு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கட்டிடவியலார் மற்றும் நில மேலான்மையாளர் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்கு முறை குழுமம் அரசு செயலர் செல்வகுமார் ஊடகத்தாரிடம் பேசுகையில் கட்டிடமனை விற்பனை முறைபடுத்துவதற்கும், வெளிப்படை தன்மைக்கும், விற்பனைக்கும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாப்பதற்கும், பிரச்சனைகளை தீர்பதற்கும் ஒழுங்குமுறை குழுமம் இது போன்ற விழிப்புணர்வு கருத்தரங்குகளை தமிழகத்தில் ஐந்து இடங்களில் நடத்தியுள்ளது.

ஓசூரில் 6 வது கருத்தரங்கை ஓசூர் கட்டிடவியலார் மற்றும் நில மேலான்மையாளர் கூட்டமைப்பின் மூலம் நடந்து வருகிறது.

தமிழ்நாடு கட்டிட,மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் கடந்த 22.6.2017 முதல் இயங்கி வருகிறது. ஒரு கட்டிடம் அல்லது மனை பிரிவு 500 சமீ க்கு மேல் அல்லது 8 குடியிருப்புக்கு மேல் விற்பனை செய்வதற்கு முன்னதாக முறையாக திட்ட அனுமதி, கட்டடிட அனுமதி பெற்ற பின் குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். இடை தரகராக செயல் படும் முகவர்களும் குழுமத்தில் பதிவு செய்ய வேண்டும். செய்ய தவறினால் கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மனை அல்லது கட்டிடம் நல்ல முறையிலும் மற்றும் வெளிப்படை தன்மையிலும் விற்பனை செய்ய வேண்டும். நமது சட்டத்தின் குறிக்கோள் கட்டிட,மனை விற்பனை துறையில் வாடிக்கையாளர் நலன் காக்கப்பட வேண்டும். விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையே எழும் பிரச்சனைகளை விரைவில் களையப்படும் என்றார்.

இந்த கருத்தரங்கில் பட்டய கணக்காளர் குத்தாலிங்கம், ரோட்டரி கூட்டமைப்பு தலைவர் ஆனந்தகுமார், சந்திரசேகர், ஓசூர் கட்டிடவியலார்கல் கூட்டமைப்பு செயலர் செய்பிரகாஷ்,முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வாசுதேவன், வினய் தியாகராசன், சாகுல் அகமது, லீலா சங்கர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.