27.5 C
Hosur
வெள்ளிக்கிழமை, ஜனவரி 18, 2019
முகப்பு கைபேசி

கைபேசி

தொலைபேசி பிணையங்களுடன் இணைக்கப்பட்ட முதல் கைபேசி சுவீடன் நாட்டு காவல் துறையினரால் 1946ம் ஆண்டு வெற்றிகரமாகச் ஆய்வு செய்யப்பட்டது.

காவல் துறையினர் பயன்படுத்தி வந்த தகவல் தொடர்பு பிணையங்கள் இதன் முன்னோடி எனலாம்.

1947ம் ஆண்டு பெல் ஆய்வக பொறியாளர் டி.எச். ரிங் என்பவரால் இந்த கைபேசிகள் தன்னுடைய நிலையிலிருந்து சற்று முன்னேறின. எனினும் 1960 களில் மன்னனுவியல் துறை மேம்படும் வரை இந்த கைபேசிகள் வளர்ச்சியடையவில்லை.

1967 களில் கைபேசி வைத்திருப்பவர்கள் அழைப்பை ஏற்றுக் கொண்ட பின் அந்த எல்லையை விட்டு வெளியே சென்றால் அழைப்பு துண்டிக்கப்பட்டு விடும். ஒவ்வொரு அழைப்புக் கோபுரத்தின் எல்லைக்குள்ளேயே அந்தந்த அழைப்பை பேசி முடித்துவிட வேண்டும். அப்போதெல்லாம் அந்த அழைப்பு எல்லையே மிகவும் குறுகியது.

பெல் ஆய்வக பொறியாளர் ஆமோஸ் எட்வர்ட் என்பவர் 1970ல் தானியங்கியாக ஒரு அழைப்பு கோபுர எல்லையிலிருந்து மற்றொரு எல்லைக்கு அழைப்பு துண்டிக்காமலேயே செல்லும் ‘அழைப்பு கைமாற்ற’ தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். அது கைபேசி வளர்ச்சிக்கு பேருதவியாயிற்று.

1971ல் ‘ஏ.டி & டி’ நிறுவனம் கைபேசி வழங்க ஒப்புதலுக்காக பெடரல் தொலை தொடர்பு குழுவிடம் விண்ணப்பித்தது. அது சுமார் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் 1982ல் அனுமதிக்கப்பட்டு தனியாக அலைவரிசை ஒதுக்கப்பட்டது.

1956ல் எரிக்சன் நிறுவனம் சுவீடன் நாட்டில் தனது முதல் தானியங்கி கைபேசியை வெளியிட்டபோது அந்த கைபேசியின் எடை நாற்பது கிலோ.

அதன் பின் அதே நிறுவனம் 1965ல் புதிய எடை குறைவான கைபேசி ஒன்றைத் உற்பத்தி செய்தஹ்டு. அதன் எடை ஒன்பது கிலோ. அப்போதைய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 150. அன்றிலிருந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அங்கே மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை வெறும் 600 தான்.

முழுதும் தானியங்கியாக செயல்படத் துவங்கிய முதல் கைபேசி 1981ம் ஆண்டின் நோர்டிக் கைபேசி தான். இதை முதல் தலைமுறை கைபேசி என்று அழைத்தனர். ஆயினும் எண்பதுகளிலெல்லாம் கைபேசிகள் வண்டிகளில் நிலையாக பொருத்தப்பட்டு அவை வண்டிகளுக்குள் தொலைபேசிகள் போல செயல்பட்டன. ஏனென்றால் அவற்றின் அளவு மற்றும் எடை.

1990ல் முதல் இலக்கமுறை தொழில்நுட்ப கைபேசி அமெரிக்காவில் துவங்கியது, அதற்கு அடுத்த ஆண்டு முதல் ஜி.எஸ்.எம் தொழில்நுட்ப கைபேசி ஐரோப்பாவில் துவங்கியது. அதன் பின்பே இந்த கைபேசி அசுர வளர்ச்சி பெற்று எட்டாக் கனியாக இருந்த நிலையிலிருந்து அடிப்படைத் தேவை என்னும் தளத்திற்கு இடம் பெயர்ந்தது.

அண்மை கட்டுரைகள்

Motorbike Thief Two Wheeler Thief

Bike lifter from TN held in Chith-thoor

As per Islam, women fit only to deliver children

MUST READ