கள்ளக்காதல் விவகாரம், மின்வாரிய ஊழியர் அடித்து கொலை
ஒசூர் அருகே குண்டுகுறுக்கி ஊரில் மின்வாரிய ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகாறாரில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சூளகிரி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒசூர் அடுத்த சூளகிரி அருகேயுள்ள குண்டுகுறுக்கி ஊரைச் சேர்ந்தவர் சக்கரலப்பா...
உழவர்சந்தை முன்பு வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்
ஒசூர் உழவர்சந்தை முன்பு வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும், இதனால் தங்களது விற்பனை பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் உழவர்சந்தை உழவர்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒசூர் உழவர் சந்தையில் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி ஊர்களை...
உணவு பொருள் பங்கீடு (ரேசன்) கடையில் பாடம் படித்து வரும் தாய் குழந்தை நல நடுவ குழந்தைகள்
ஒசூர் அருகே தொளுவப்பெட்டா என்ற மலை ஊரில் கட்டி முடிக்கப்பட்ட தாய் குழந்தை நல நடுவம் கட்டிடம் பயன்பாட்டிற்கு வராததால் அங்குள்ள உணவு பொருள் பங்கீடு கடையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
தொடரும் இந்த நிலையை தவிர்க புதிய தாய் குழந்தை நல...
குடிநீரில் கலந்து வந்த சாக்கடை கழிவு நீர்
ஒசூர் பெரியார் நகரில் குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியல் செய்ய முற்பட்டனர். காவல் துறையினர் அவர்களை அமைதிப்படுத்தி சீரான நல்ல குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர்.
ஒசூர் பெரியார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடிகளில்...
பேரிகை காவல் நிலையத்தில் பெண் கற்பழிப்பு?
ஒசூர் அருகே காவல் நிலையம் முன்பு பெண் நச்சு குடித்து தற்கொலை முயற்சி : காவலர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு
ஒசூர் அருகேயுள்ள பேரிகை காவல் நிலையம் முன்பு பெண் ஒருவர் நச்சு குடித்து தற்கொலைக்கு முயன்ற நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து...
சாலை விபத்தில் உயிரிழந்த குரங்கின் ஆன்மா இறைவனடியில் அமைதி அடைய சடங்கு
ஒசூர் அருகேயுள்ள குந்துகோட்டை ஊரில் சாலை விபத்தில் உயிழந்த குரங்கின் ஆன்மா -இறைவனடியில் அமைதி அடைய கல்லரையில் 11வது நாள் சடங்குகளை நடத்தி ஊர் மக்கள் வழிபட்டனர்.
ஒசூர் அருகேயுள்ள குந்துகோட்டை ஊரில் கடந்த 11 நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் வேகமாக சென்ற...
தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள்
ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில் தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் துவங்கியது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 55 அணிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில்...
குடிகாரர்களை கண்டித்த உழவருக்கு மண்டை உடைப்பு
ஒசூர் அருகே உழவு நிலத்தில் மது அருந்தி கொண்டிருந்த குடிகாரர்களை கண்டித்த உழவரின் மண்டை உடைக்கப்பட்டது.
அவரை தாக்கிய 3 குடிமகன்களில் இருவரை காவலர்கள் கைது செய்தனர். தப்பியோடி மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
ஒசூர் அடுத்த தேன்கனிகோட்டை அருகேயுள்ள லக்கச்சந்திரம் ஊரை சேர்ந்நதவர் உழவர் ராசேந்திரன்.
இவருக்கு...
கேரள மக்களுக்கு புதிய ஆடைகளை அனுப்பி வைத்த ஒசூரில் வாழும் திருநங்கைகள்
மழை மற்றும் வெள்ள இடர்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ஒசூர் பகுதியிலுள்ள திருநங்கைகள் 80 ஆயிரம் மதிப்புள்ள புத்தம் புதிய ஆடைகளை அனுப்பி வைத்தனர். இதனை ஒசூர் வட்டாச்சியரிடம் அனைவரும் வழங்கினர்.
கேரளாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக அம்மாநில...
தனியார் பேருந்து பின்பிறமாக மோதிக்கொண்ட விபத்தில் மாணவன் பரிதாப பலி
ஓசூரில் தனியார் பேருந்து பின்பிறமாக மோதிக்கொண்ட விபத்தில் அரசுப்பள்ளி மாணவன் பரிதாப பலி : பெற்றோர்கள் கதறல்
ஒசூர் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் பின்புறத்தில் ஒன்று கொண்டு மோதிக்கொண்ட விபத்தில் அரசுப்பள்ளி மாணவன் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த நிகழ்வு குறித்து...