காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு அழுத்தம்

57
Naam Thamizar Katchi demands Cauvery Management Board

நாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பில் “காவிரி ஆற்று நீர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” நடைபெற்றது.

Naam Thamizar Cauvery Issue Public Meeting
Naam Thamizar Cauvery Issue Public Meeting

காவிரி ஆற்று நீர் பங்கீடு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் தண்ணீரை குறைத்தது வருத்தம் அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொன்னது நம்பிக்கை அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கருநாடக அரசியல் கட்சிகள், நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும்படி செய்கின்றனர். மேலாண்மை வாரியம் அமைப்பதை நேரம் தாழ்தும் வேலையில் நடுவன் அரசு ஈடுபட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழங்கப்பட்ட நேரத்தில் இன்னும் இரண்டு வாரம் மட்டுமே உள்ளது.

எனவே, இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு நடுவன் அரசுக்கு எந்த விதத்தில் அழுத்தம் கொடுக்கலாம் என்பதை தீர்க்கமாக தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவன் அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் பேசினார்கள்