திருடு கொடுத்த பெண்ணிடமே தாங்கள் திருடிய தங்க சங்கிலியை விற்க முயன்ற திருடர்கள்

78
Chain Snatchers in Motorbike
Chain Snatchers in Motorbike

நாம் திருடர்களிடம் பரிகொடுத்த தங்கச் சங்கிலி நம்மிடமே விற்பனைக்கு என்று யாராவது கொண்டுவந்தால் நமக்கு எப்படி இருக்கும்?

சென்னை செம்மலை பகுதியை சேர்ந்த பெண் செலினா. இவர் செம்மலை அம்பேத்கர் நகர் பகுதியில் வாழ்கிறார். செம்மலையில் ஒரு நக கடையில் பணியாற்றுகிறார்.

இவரிடம் கடந்த செவ்வாய் அன்று காலை, வீட்டருகே நடந்து செல்லும் பொழுது சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 32 கிராம் தங்கச் சங்கிலியை கத்தி முனையில் பரித்துச் சென்றுவிட்டனர்.

செலினா, சோளவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அவர்கள், திருடர்களை சூரி என்கிற சுரேந்திரன் மற்றும் அவன் கூட்டாளி எராதாகிருட்டினன் எனவும் அடையாளம் கண்டனர்.

இன்னிலையில், கடந்த நாள், லட்சுமி (39), என்கிற பெண், அந்த சங்கிலியை, செலினா வேலை செய்யும் கடைக்கு எடுத்து வந்து விற்க முயற்சி செய்தார்.

செலினா, தனது நகையே விற்பனைக்கு வந்திருப்பது கண்டு அதிர்ந்து காவல் துறை உதவி நாடினார்.

காவலர்கள் லட்சுமியை உடணே கைது செய்தனர்.