Chess
Chess
Chess
Chess

ஓசூரில் மாநில அளவிலான ஏழு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்க முதன்மை சான்ற வெற்றி வீரருக்கான போட்டிகள் நேற்று துவங்கி நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். ஓசூர் தனியார் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நேற்று ஏழு வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கான 27 வது மாநில அளவிளான சதுரங்க முதன்மை சான்ற வெற்றி வீரருக்கான போட்டிகள் துவங்கி நடைபெற்றன.

இந்த போட்டிகளை முறைப்படி, கல்லூரியின் முதல்வர் முனைவர் ரங்கநாத் துவக்கி வைத்தார். கிருட்டிணகிரி மாவட்ட சதுரங்க சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 வயதிற்கு உட்பட்ட ஆண் பெண் சதுரங்க வீரர் வீராங்கனைகள் 125 பேர் தங்களது பெற்றோர்களுடன் வந்துள்ளனர்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டிகள் பல சுற்றுகளாக நடைபெற்று, இம்மாதம் 13 ம் தேதி இறுதி போட்டிகளுடன் நிறைவடைய உள்ளன. இந்த போட்டிகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் தலா 4 ஆண் மற்றும் பெண் சதுரங்க வீரர் வீராங்கணைகள் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ள நாட்டு அளவிலான சதுரங்க முதன்மை சான்ற வெற்றி வீரருக்கான போட்டிகளுக்கு தகுதி பெற்று அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Yesterday, in an indoor stadium at Adhiyamaan Engineering College, Hosur, Tamil Nadu state level chess match was started.  The match is being held on league system and will have several rounds.

Final match will be held on 13th of this month.

The match is being held for those under the age of 7 years.  There were 125 participants from Chennai, Hosur, Vilupuram, Salem, Tirunelveli and other parts of the state.

Finalists, 4 each in boy and girl category will be selected and will be allowed to participate in a championship match to be held in national level in next two months time.

 

sdfdf