அவ்-முவ-மு-அ Oumuamua
அவ்-முவ-மு-அ Oumuamua
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

அவ்-முவ-மு-அ

2017-ல் அவாயில் உள்ள தொலை நோக்கியில், நீளமான உருட்டை வடிவம் கொண்ட ஒரு விண் பொருள் ஒன்று நம் பூமியை கடந்து செல்வதை வாண் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த பொருளுக்கு “அவ்-முவ-மு-அ” என்று பெயர் சூட்டினர், அவாயின் உள்ளூர் மொழியில் , வேற்று உயிரினத்தின் பொருள் என்று பொருள்படும்

Oumuamua light curve simulation
Oumuamua light curve simulation

அது சுமார் 1300 அடி நீளமும், 130 அடி அகலமும் கொண்டதாக இருந்தது.

இந்த விண் பொருள் வேற்று உயிரினம் தொடர்பானதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் அகண்ட தன்மை, நம்மை எப்பொழுதும் வேற்று உயிரினம் தொடர்பான ஆவல்களை அதிகப்படுத்திக்கொண்டே உள்ளது.

“அவ்-முவ-மு-அ” பொருத்தவரை, இரு சந்தேகங்கள் உள்ளன.

உடுக்கோளாக இருந்தால் அது செவ்வாய் – கும் வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதிகளை சுற்றி வரும் பாறையாக இருக்க வேண்டும். வால்விண்மீணாக இருப்பின், நம் ஞாயிறு குடும்பத்தை சார்ந்த ஒரு பெரிய விண் கல். அதற்கு வால் பகுதி ஒன்று இருக்கும்.

முதலில் அது ஒரு உடுக்கோளாக இருப்பின் அதன் உருவ அமைப்பு ஏன் அது பொதுவாக காணப்படும் உடுகோள் உருவ அமைப்பிலிருந்து வேறுபடுகிறது? அது ஒரு வால்விண்மீணாக இருப்பின், அதன் வால் பகுதி எங்கே?

30 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது, இத்தகைய வேற்று உருவம் கொண்ட ஒரு பொருளானது நம் பூமியை கடந்து செல்வதை காண்கிறோம்.

“அவ்-முவ-மு-அ” கண்டிப்பாக ஒரு உடுக்கோளோ அல்லது வால்விண்மீணோ அல்ல.

தற்பொழுது, விண்வெளி ஆய்வாளர்கள் பல வகை கருத்துக்களை “அவ்-முவ-மு-அ” தொடர்பாக வெளியிட்டு வருகின்றனர்.

ஆர்வார்டு பல்கலைகழகத்தின் ஷ்முயல் பியாலி மற்றும் ஆப்ரகாம் லோயேப் ஆகியோர் தமது கருத்தில் “”அவ்-முவ-மு-அ” ஒரு வேற்று உயிரினத்தின் ஆய்வக கருவியின் ஒரு உடைந்த பொருளாக இருக்கலாம் அல்லது, பூமியை நோட்டமிடும் நோக்கில் அனுப்பபட்ட ஒரு ஆய்வு கருவியாக இருக்கலாம்” என்று கூறியுள்ளனர்.

சில ஆய்வாளர்கள் அது அண்ட வெளியில் சுற்றித்திரியும் ஒரு பாறை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர். பாறை இல்லை என்பதற்கு என்ன சான்று உள்ளது என்பது அவர்களின் கேள்வி.

அவ்-முவ-மு-அ
அவ்-முவ-மு-அ

“அவ்-முவ-மு-அ” – யின் சுற்றுப் பாதை அமைப்பு நம்மை பல கேள்விகள் கேட்க வைக்கிறது.

வாணில் இருந்து பூமியை நோக்கி வந்த அது, பூமியின் சுற்றுவட்ட பாதையில் சிறிது பயனித்து, பின்பு வேறு பாதையை தேர்வு செய்து ஞாயிறு குடும்பத்தை விட்டு விலகிச் சென்று விட்டது.

அது வந்து சென்ற வேகம், அறிவியலாளர்கள் திகைக்க வைக்கிறது. ஏனெனில், ஒரு உடுக்கோளோ அல்லது வால்விண்மீணோ இத்தகைய வேகத்தை கொண்டிருப்பதில்லை.