படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூரில் திமுக, காங்கிரச், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவேந்தல் அஞ்சலி நடைபெற்றது. இதில் நூற்றுக்கனக்கானோர் ஊரின் தலையான தெருக்கள் வழியாக மவுன ஊர்வலம் சென்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் வயது மூப்பினால் உடல் நலம் குன்றி இத்திங்களின் 7ஆம் நாள் மரணமடைந்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டு அவரது சமாதியில் நாள்தோறும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒசூரில் நகர திமுக சார்பில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், சமத்துவமக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நூற்றுக்கணக்கானோர் ஊரின் தலையான தெருக்கள் வழியாக மவுன ஊர்வலமாக சென்றனர்.

இறுதியில் ஒசூர் ராம்நகர் அண்ணாசிலையை ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த கருணாநிதி அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அனைவரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு நினைவேந்தல் நிகழ்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அனைத்துக் கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர்.