Programme on Rain Water Harvesting
Programme on Rain Water Harvesting
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
Programme on Rain Water Harvesting
Programme on Rain Water Harvesting

In the conference held to create awareness among public on rain water harvesting, it was told that before the start of monsoon, public should keep their terrace clean and drainage pipes should also be maintained clean.  If public are interested to store rain water directly into a water sump, then for every 1000 litre water, 4 gm bleaching powder should be added and only then the water should be used.

மழைநீர் சேகரிப்பு குறித்த கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.டி.பி.ராஜேஷ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கிவைத்தார்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிலத்தடி நீர்; சேகரிக்க வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்;  சார்பில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தி பராமரிப்பது குறித்த  கருத்தரங்கினை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.டி.பி.ராஜேஷ், இ.ஆ.ப., அவர்கள்  துவக்கிவைத்தார்.  இக்கருத்தரங்கில் மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிமன்றத் தலைவர்கள்; கலந்துக் கொண்டனர்.

கருத்தரங்கை துவக்கிவைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த கையேட்டினை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது,

  1.  பருவமழைக்கு  முன்பு வீட்டு கூரையையும்  மொட்டை மாடியையும்  பொதுமக்கள் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்.
  2. மழைநீர் கொண்டு வரும் குழாய்களின் ஓட்டைகளில் அடைப்பு இருப்பின் அவற்றை சரிசெய்து பராமரிக்க வேண்டும்.
  3.  மழைநீர் சேகரிக்க  ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி  அமைத்திட வேண்டும்.
  4. மழைநீர் சேகரிப்புக்காக நேரடியாக கிணற்றிற்குள் விடப்படும் மழைநீரை பயன்படுத்துவதற்காக  1000 லி நீருக்கு 4 கிராம் என்ற அளவில் பிளீச்சிங்  பவுடர் கரைக்கப்பட்டு நீர்த்தேக்க தொட்டி மற்றும்  மேல் நிலைத் தொட்டியில்   விட்டு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  5. குடிநீருக்காக மழைநீரை  உபயோகப்படுத்தும் போது, நுண்கிருமிகளை அழிக்க தண்ணீரை நன்றாக காய்ச்சி பொதுமக்கள் வடிகட்டி  குடிக்க வேண்டும்.  அதனால் நோய் கிருமிகள் பரவாமல் பார்த்து தடுக்க முடியும்.
  6. ஊராட்சி மன்றத்தலைவர்கள்  அந்தந்த  கிராமங்களில் மழைநீரை சேகரிப்பு வசதிகள் மற்றும்  அதனால் ஏற்படும் நன்மைகளையும்  பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  7. அனைத்து வீடுகளிலும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் உயர்த்த வேண்டும்.
  8. இதனை பொதுமக்கள் அறிய ஊராட்சி மன்ற தலைவர்கள் துண்டு பிரசுரம் மூலம் அனைத்து பொதுமக்களுக்கும் தெரியபடுத்த வேண்டும்

என மாவட்ட ஆட்சியர் கருத்துதரங்கில் பேசினார்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பி.மந்திராசலம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (கிருஷ்ணகிரி) திரு.கே.விஸ்வநாதன், இணை புவியியல் அமைப்பு வல்லுனர் திரு.இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.பி.பெரியசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.மலர்விழி மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர். பி.பிரேம்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.