தீபிகா படுகோனேக்கு வரும் நவம்பர் 19-ந் நாள் மணம் முடிப்பு

ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேயேயும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்

தீபிகா படுகோனே, ரன்வீர்சிங் Deepika Padukone with Ranveer Singh
Deepika Padukone with Ranveer Singh தீபிகா படுகோனே, ரன்வீர்சிங்
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

32 வயதான தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர்சிங்கை நவம்பர் திங்கள் 19-ஆம் நாள் மணம் முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘கோச்சடையான்’ படத்தில் ரசினிகாந்திற்கு இணையாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கிறார்.

சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்து அணைவரின் கவணத்தையும் ஈர்த்தார் . அந்த படத்தில் நடித்ததற்காக, எதிர்ப்புகளையும் கொலை மிரட்டல்களையும் சந்தித்தார்.

இதே படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேயேயும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவரும் இணயாக சுற்றும் புகப் படங்கள் அடிக்கடி வெளிவந்தன. இவர்களுக்கு கமுக்கமாக மண முடிப்பு ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தீபிகா படுகோனே-ரன்வீர்சிங் மண முடிப்பு ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

ரன்வீர்சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுலா தூதுவராக இருக்கிறார். எனவே அங்குள்ள அரசு அந்த நாட்டுக்கு வந்து மணம் முடிப்பு செய்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால் தீபிகா படுகோனேவுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை. இத்தாலியில் மணம் முடிப்பு செய்து கொள்ள ஆசைப்பட்டார்.

நடிகை அனுசுகா சர்மாவுக்கும் மட்டப் பந்து வீரர் விராட் கோலிக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது.

இத்தாலி அரசும் மணம் முடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளது. தீபிகா படுகோனே-ரன்வீர் சிங் மணம் முடிப்பு எப்போது நடக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான நாள் முடிவாகி உள்ளது.

இந்தாண்டு நவம்பர் திங்கள் 19-ஆம் நாள் இவர்கள் மணம் முடிப்பு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரன்வீர்சிங் இது தொடர்பாக இந்தாண்டின் துவக்கத்தில் கூறும்போது ‘எனது மண முடிப்பு இந்த ஆண்டு நடக்கும்’ என்றார். ஆனால் மணப்பெண் பெயரை அவர் சொல்லவில்லை.