Fire in Sub Inspector’s house near ASP office

1
Deepavali Fire

At wee hours, couple of days before, wife and two sons of SI Sundaram, who is serving in Anchetty kaaval nilayam, found fire in their house.

The three, came running out from the house, while in few minutes time, fire engulfed the entire house.

They alerted fire service, who came and put down the fire to control the same not spreading.

Timely alert of the incumbents of the house, saved their lives.

முரசு நாடு என்கிற ஓசூரில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் தீ விபத்து மனைவி, மகன்கள் உயிர் தப்பினார்கள்

தேன்கனிக்கோட்டை உட்கோட்டம் அஞ்செட்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சுந்தரம் (வயது 54). இவருக்கு மலர்கொடி (45) என்ற மனைவியும், சரத்குமார் (25), குமார் (21) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் 2-வது மாடியில் வாழ்ந்து வருகிறார்கள்.

நேற்று முந்தைய நாள் இரவு உதவி ஆய்வாளர் சுந்தரம் பணிக்காக சென்று விட்டார். அவரது மனைவி, மகன்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த நாள் அதிகாலை 3.30 மணி அளவில் அவர்களின் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்த துணிமணிகள் எரிந்தன. இதை பார்த்த மலர்கொடி, மகன்கள் சரத்குமார், குமரன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். அதற்குள் தீ வேகமாக பரவியது.

இதைத் தொடர்ந்து ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த துணிமணிகள், பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. சரியான நேரத்தில் தீ பரவுவதை கண்டு வெளியேறியதால் வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார்கள். இது தொடர்பாக ஓசூர் நகர் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.