Soolagiri, Choolakiri
Soolagiri, Choolakiri
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
Soolagiri
Soolagiri

Day before yesterday, flash flood near Soolagiri near Hosur washed away four people, in which two managed to swim and escape while mother and child was washed away.

With the help of information from villagers, fire personals have recovered the dead body of the woman.  Officials are still in search of the child.

ஒசூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் பலி : குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

ஒசூர் அருகே கடந்த நாள் இரவு பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செலலப்பட்ட பெண்ணையும் அவரது 2வயது குழந்தையும் இரவு முழுவதும் தேடியதில் பெண்ணில் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.  தொடர்ந்து குழந்தையை தீயணைப்புத்துறையினர் தேடிவருகின்றனர்.

ஒசூர் அடுத்த சூளகிரி, காமன்தொட்டி, மேடுப்பள்ளி, சென்னப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாள் கனத்த மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது மேடுபள்ளி கிராமத்தை சேர்ந்த குண்டப்பா, சசிகலா, சந்திரகலா மற்றும் அவரது 2வயது குழந்தை தனுஸ்ரீ ஆகியோர் தோட்டவேலை முடித்து மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

வரண்ட நிலையிலிருந்த காட்டாற்றில் அவர்கள் வரும்போது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் 4 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் குண்டப்பா மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தப்பித்து கரையேறி வீடு திரும்பி கிராமமக்களிடம் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல்துறையினர் தீயணைப்புத்துறை மற்றும் அப்பகுதி கிராமமக்கள் உதவியுடன்  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவரையும் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்நிலையில் இன்று காலை பந்தர்குட்டை என்ற கிராமத்தின் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சந்திரகலாவின் உடல் இறந்த நிலையில் கிடந்தது, இதுகுறித்து அப்பகுதிமக்கள் சூளகிரி காவல்துறையினருக் தகவல் அளித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சந்திரகலாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஒசூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மேலும் வெள்ளததில் அடித்து செல்லப்பட்டு காணமல் போன குழந்தை தனுஸ்ரீ யை தேடிவருகின்றனர்,

சூளகிரி, காமன்தொட்டி, மேடுப்பள்ளி, சென்னப்பள்ளி பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதிக அளவில் கனமழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது,

வெள்ளநீரில் தாயும் மகளும் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.