படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூரில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருனாநிதிக்கு 3 டன் மலர்களால் பூ சந்தை வியாபாரிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திமுக தலைவர் கருனாநிதிக்கு மறைவை தொடர்ந்து அவரது உடலுக்கு பொது மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் , திரையுலகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செய்து வருகின்றனர். நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

ஒசூரில் பூ சந்தை வியாபாரிகள் கருனாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது திருவுருவ படத்திற்கு ரோச, மல்லிகை, செண்டு மல்லி, கனகாமரம், சாமந்தி, பட்டன் ரோசு, அரளி, உள்ளிட்ட பல்வேறு வகையான 3 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் கருனாநிதிக்கு நல்லடக்கம் செய்ய அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர்.