PRO - 1 - 27.05.2013
PRO - 1 - 27.05.2013
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
PRO - 1 - 27.05.2013
PRO – 1 – 27.05.2013

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டம் திறந்து வைக்கப்படவுள்ளதையொட்டி – மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,  ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு.கே.பி.முனுசாமி அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்;டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.டி.பி.ராஜேஷ்.இ.ஆ.ப, அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பொ) முதன்மை செயலர் திரு.சி.வி.சங்கர்ää இ.ஆ.ப.ää அவர்கள் முன்னிலை வகித்தார்.

பின்பு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசியதாவது.

இத்திட்டத்தினால் 30 லட்சம் மக்கள் பயன்பெறுவதோடு புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ் மாற்று குடிநீரை மக்கள் பயன்பெற காவிரி குடிநீர் ஆதாரத்தில் இருந்து  குடிநீர் கொடுத்துள்ளார்கள்.  இத்திட்டம் நிறைவேற நிறைய இடர்பாடுகளை எதிர்த்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இத்திட்டம் இந்திய துணை கண்டத்திலேயே சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும்.  இத்திட்டத்தின் கீழ் 9936 கி.மீ நீளம் குழாய்கள் பதிக்கப்பட்டு, 1500 மி.மீ அளவு மற்றும்  63 மில்லி லிட்டர் அளவுள்ள குழாய்கள் வரை பதிக்கப்பட்டுள்ளது.  இதில் 16 கோடி லிட்டர் குடிநீர் சுமந்து செல்லும் குழாயை பதிக்கும் பணியில் வல்லுநர்களால் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் கடல் மட்டத்தில் இருந்து குடிநீர்  300 மீட்டர் உயரத்தில் உள்ள  கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது.  அவற்றில் ஒசூர் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 1125 மீட்டர் உயரத்தில் உள்ளவற்றுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட  உள்ளது. ஒசூர் பகுதிக்கு குடிநீர் கொண்டுவர 5 இடங்களில் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அதன் மூலம்    குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   விரைவில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது என அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்;சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.பிரகாசம், சார் ஆட்சியர் திரு.பிரவின் பீ. நாயர், இ.ஆ.ப., நிர்வாகப் பொறியாளர்கள் திரு.சங்கரநாராயணன், திரு.ரபிக்ää மேற்பார்வை பொறியாளர் திரு.மோகனசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.  நிறைவாக தலைமைப் பொறியாளர் திரு.கோபால்ராம் அவர்கள் நன்றி கூறினார்.