படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூரில், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் தொழிலில் நீதித்துறையில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கருத்தரங்கில் ஒசூர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒசூர் தனியார் மண்டபத்தில் ஒசூர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர்கள் தொழிலில் நீதித்துறையில் உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அனைத்திந்திய வழக்குரைஞர் கழகம் தலைவர் கார்வேந்தன் அவர்கள் கலந்து கொண்டு பல கருத்துரைகளை எடுத்துரைத்தார்.

இதில் வழக்கறிஞர்கள் தொழிலில் நீதித்துறையில் உள்ள சவால்கள் என்ன என்பதையும் அதனை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும், சமூகத்தில் வழக்கறிஞர்களின் பங்கு என்ன, அவர்களின் பணிகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பன போன்றவை இந்த கருத்தரங்கில் பேசப்பட்டன.

இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பேசினர்.

இந்த கருத்தரங்கில், இளம் வழக்கறிஞர்களுக்கு பதிவு செய்தவுடன் நடுவன் மற்றும் மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதவித்தொகை வழங்க வேண்டும், அனைத்து நீதிமன்றங்களிலும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், ஊழலற்ற தூய்மையான நீதி மேலான்மைக்காக வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டக்கல்வியில் சிறந்த கல்வியை கொடுத்து நல்ல வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும், உயிரிழந்த வழக்கறிஞர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்கி வரும் ஊழியர் வருங்கால வைப்பு பணம் போல இந்தியா முழுவதும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையும் அரசாங்கத்திற்கு வைக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் ஒசூர் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி : கார்வேந்தன் : அனைத்திந்திய வழக்குரைஞர் கழகத்தின் முன்னாள் தலைவர்