Electric Fence
Electric Fence
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Hosur electric fence targeted for pig, injured students

Two young boys were critically injured as they were trapped in a electric fence, which was actually put for wild boars.

While law prohibits fencing farm land using electric fence, villagers do the same, while officials maintain a blind eye on it.

Yesterday night Pillaikoththoor village near Hosur got an information that, thieves have entered their village on which more than 50 men, mostly young boys went searching for the thieves.

Brothers, Nagaraj and Murali, who were in a motor bike along with others, who were also in bikes, went searching for thieves in near by area.

While roaming around the area in their bike, bothers came into the trap of electric fence, in which both of them were critically injured.

Fellow villagers rushed to their help after hearing noise. They were rushed to a private hospital in Hosur were they are undergoing treatment.

Meanwhile police have registered a case and are in search of those who have put electric fence, which is a crime.

Forest officials were informed by police that a wild forest cat also have lost its life in the electric fence. Now, Forest officials have also registered a case and are in search for the accused who have put electric fence

ஒசூர் அருகே காட்டுப்பன்றிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி மாணவர்கள் படுகாயம் : தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை கொல்ல வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர் இதனைத்தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒசூர் அருகேயுள்ள பிள்ளைகொத்துர் கிராமத்தை சேர்ந்த மல்லையா என்பவரின் மகன்கள் நாகராஜ் மற்றும் முரளி, இதில் நாகராஜ் பெங்களுருவில் உள்ள தனியார் கல்லுரியில் படித்து வருகிறார். முரளி ஒசூரிலுள்ள அரசுப்பள்ளியில் படித்து வருகிறார். பிள்ளைகொத்துர் கிராமத்திற்குள் நள்ளிரவில் திருடர்கள் சிலர் வந்ததாக வந்த தகவலை அடுத்து 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இருசக்கரவாகனங்களில் திருடர்களை தேடிச்சென்றனர்.

அப்போது, சகோதர்களான நாகராஜூம், முரளியும் தங்களது இருசக்கரவாகனத்தில் திருடர்களை தேடிச்சென்றனர். கிராமத்தின் அருகேயுள்ள விவசாய தோட்டங்களில் புகும் காட்டுப்பன்றிகளை கொல்ல சிலர் விவசாய
தோட்டத்திற்கு அருகே மின்வேலிகளை அமைத்துள்ளனர். இதனை கவனிக்காக இருவரும் இருசக்கரவாகனத்தில் சென்ற போது மின்வேலியில் சிக்கினர். இதில் து£க்கி வீசப்பட்டு உடல் முழுவதும் பலத்த காயமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவரையும் மீட்ட கிராமமக்கள் ஒசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கிராமமக்கள் அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காட்டுவிலங்குகளை கொல்ல மின்வேலிகளை அமைத்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த மின்வேலியில் சிக்கி காட்டுபூனை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு வந்த விசாரணை நடத்தினர்.