Hosur Elephants
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Hosur elephants numbering about 61, enjoyed their day taking bath near Thenkanikottai.

Due to scarcity of food inside forest area, these elephants are migrating into human habitats, spoiling farm produce.

Though Tamil Nadu government is allocating enough money to grow banana and other crops inside the forest, that elephants love, the money disappears, making elephants to appear in village areas.

Further money is spent for compensating the loss created by the elephants.

ஓசூர் அருகே குட்டையில் கும்மாளமிட்ட யானைகள் கூட்டம்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் கூட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ளன.

அதில் 40 யானைகள் ஜவளகிரி காட்டில் உள்ளன. 60 யானைகள் ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டிற்கு கடந்த வாரம் வந்தன. அவை போடூர், சானமாவு, தேன்துர்க்கம் வனப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தன.

இதனால் விவசாயிகளின் ராகி, நெல், தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன.

இந்த யானைகளை மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் ஓசூர் வனச்சரகர் சுகுமார் மற்றும் வன குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போராடி விரட்டினார்கள். தற்போது யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் அருகில் உள்ள குட்டையில் குளித்து மகிழ்ந்தன. அந்த குட்டையில் தண்ணீர் குடித்தும் நீண்ட நேரமாக குளித்தும் மகிழ்ந்தன. காட்டில் உணவு இல்லாததால் தினமும் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதை இந்த யானைகள் வழக்கமாக கொண்டுள்ளன.

எனவே கர்நாடகாவில் இருந்து வந்துள்ள இந்த யானைகளை மீண்டும் ஜவளகிரி காடு வழியாக கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கே விரட்டிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.