படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில் தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் துவங்கியது.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 55 அணிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.

ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி மாதிரிப் பள்ளியில் கடந்த நாள் தென்னிந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் துவங்கியது.

இந்த கால்பந்து போட்டிகளை முன்னாள் இந்திய கால்பந்து வீராங்கனையும் தற்போது பெரம்பலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உதவி ஆய்வாளருமான வினிதா பந்தை உதைத்து துவக்கி வைத்தார்.

இந்த போட்டிகள் 29, 30, 31 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய அளவில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

மொத்தம் இந்த போட்டிகளில் 55 அணிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலிருந்து வந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

சிறுவர், இளையோர், மூத்தவர், பெரியோர் உட்பட பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

 

தமிழத்தில் சேலம், ஈரோடு, கிருட்டிணகிரி, தருமபுரி, ஒசூர், தேன்கனிகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பள்ளி மாணவர்கள் இந்த கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பள்ளியில் முதலாமாண்டாக இந்த போட்டிகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் விளையாடினர்.

பெண்களுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் ஏற்படும் வகையிலும் மற்ற விளையாட்டு போட்டிகளை போல கால்பந்து போட்டிகளிலும் மாணவர்கள் கூடுதலாக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் இந்த கால்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.