Power failure - candle
Power failure - candle
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

தற்போது ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்ப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டை தமிழ் நாடு மின் வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

காலை வேளையில் 30 நிமிடமும் பிற்பகலில் 30 நிமிடம் என நாள் ஒன்றிற்கு 1 மணி நேர மின் தடையை தொழிற்சாலைகளும் குடியிறுப்புகளும் அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தி பகுதிகளில் நல்ல காற்றடித்து மின் உற்பத்தி முழு வீச்சில் நடந்தேரி வரும் நிலையிலும், மேட்டுர் அனையின் நீர் மட்ட அளவு கிட்டத்தட்ட முழு அளவு இருப்பதால் நீரில் இருந்து உற்பத்தியாகும் மின் அளவும் முழு அளவிலும், பிற மின் உற்பத்தி நிலயங்களும் முழு வீச்சில் இயங்கி வரும் நிலையில் ஓசூர் தொழில் நகரப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தகவல் பெற, ஓசூர் மின் வாரிய செயற் பொறியாளரை நமது ஓசூர் ஆன்லைன் ஊடகவியலாளர் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

செயற் பொறியாளர் அவர்கள் 30.07.2018 நாளிட்ட மின் வாரிய செய்தி சுற்றறிக்கையை நம்மிடையே பகிர்ந்தார்.

அதில், குருபரபள்ளியில் இயங்கி வந்த 100 MVA தானியங்கி மின்மாற்றி பழுதடைந்ததால் சூளகிரி, மேலுமலை, வேப்பனபள்ளி, காமன்தொட்டி, குருபரப்பள்ளி, மகாராசகடை, ஆலப்பட்டி, சின்னகொத்தூர், பதிமடுகு, நல்லூர ஆகிய பகுதிகளுக்கு காலை முதல் மாலை வரை மின் தடை ஏற்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓசூர் பகுதியில் மின் தடை குறித்த எத்தகைய முன் அறிவிப்பும் அந்த செய்தி குறிப்பில் இல்லை.

ஓசூர் பகுதி தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த பிற தொழில் வழங்களும் உள்ள ஒரு ஊர்.

இங்கே அறிவிக்கப்படாத மின் வெட்டு என்பது நாட்டின் பொருளாதார நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்,

ஆகவே, மின் வாரிய உயர் பொறுப்பில் உள்ள அலுவலர்கள், இது தொடர்பில் கவனம் செலுத்தி, ஓசூர் பகுதியில் நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டை உடனே தீர்த்திட வகை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஓசூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.