படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே மத்திகிரியில் அரசுப்பேருந்து எதிரே வந்த சிறிய சரக்குந்து மற்றும் கார் ஆகியவை நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் சென்ற பயணிகள், சிறிய சரக்குந்து மற்றும் காரில் சென்ற பயனிகள் என 10க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

ஒசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டையிலிருந்து ஒசூர் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

ஒசூர் அருகேயுள்ள மத்திகிரி கால்நடைப்பண்ணை அருகில் அரசுப்பேருந்து சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த சிறிய சரக்குந்து அரசுப்பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. அப்போது சரக்குந்தின் பின்னால் வேகமாக வந்த காரும் சரக்குந்தின் மீது மோதியது.

3 வண்டிகளும் ஒன்றோடு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த விபத்தில் அரசுப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள், சரக்குந்து மற்றும் கார் ஆகியவற்றில் சென்ற பயணிகள் என 10க்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்கள் அடைந்தனர்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த மத்திகிரி காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு 108 உதவுகை ஊர்தி உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. சரக்குந்து ஒட்டுநர் கைபேசியில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டி வந்ததே இந்த விபத்துக்கு அடிப்படை என கூறப்படுகிறது.

3 வண்டிகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட விபத்தில் ஆகூழாக பொதுமக்கள் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து மத்திகிரி காவதுறை விசாரணை நடத்தி வருகின்றனர்.