படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Hosur temple theft in Ambal Nagar, near TVS Nagar has sent a shock wave among public.

Hosur temple theft is being reported frequently from different parts of Hosur.  Recently a Hosur temple theft was reported at Barathidasan Nagar.

Paktha Anjenayar Temple is located in Ambal Nagar, which is adjacent to TVS Nagar.  People from TVS Nagar, Vikas Nagar, Manjunatha Nagar and those living in Thally road, visit the temple to worship the Lord.

Cheenivasan is working as the Poosari.

Cheeni, completing all worships locked the temple on Friday night.  When he came back on Saturday, he noticed that, the metal sheet on one side of the temple is moved apart and the temple’s presentation box is broke open.

Cheeni, alerted Rajarathinam, Executive officer of Hindu Religious board who inturn lodged a complaint with Mathikiri police.  Police are now searching for the culprit.
ஓசூர் அருகே ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

ஓசூர் அருகே ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.

ஓசூரில் தளி செல்லும் சாலையில் அம்பாள் நகரில் பிரசித்தி பெற்ற பக்த ஆஞ்சநேய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்பாள் நகர், விகாஸ் நகர், சுற்று வட்டார பகுதி பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். நேற்று முன்தினம் கோவிலின் பூசாரி சீனிவாசன் வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் கோவிலுக்கு வந்த போது கோவிலின் பின்பகுதியில் உள்ள இரும்பு தகடு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவிலிற்குள் மர்ம ஆசாமிகள் நுழைந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து பூசாரி சீனிவாசன் அறநிலைய துறை செயல் அலுவலர் ராஜரத்தினத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறித்து மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து நபர்களை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.