படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

BJP leader Pon Radhakrishnan, now a central Minister for Surface and Shipping Transportation, was at Hosur and heard members from HOSTIA – Hosur Small and Tiny Industries Association.

HOSTIA President Gnanasekaran petitioned the minister and here below is the content:

உதான் திட்டத்தின் கீழ் ஒசூரில் இருந்து விமான சேவையை விரைந்து தொடங்க வேண்டும். இதுவரை தரை வழி போக்குவரத்தை மட்டுமே நம்பி வந்த தொழில் நகரமான ஒசூருக்கு இனி விமான சேவையையும், ரயில் போக்குவரத்தையும் தொடங்க வேண்டும்.

ஒசூர்- சோலார்பேட்டை இடையே ரயில் பாதை அமைத்து சென்னை- பெங்களூருக்கு ஒசூர் வழியாக தொடர் வண்டி இயக்க வேண்டும். அதுவரை ஒசூரில் இருந்து பெங்களூரு வழியாக சென்னைக்கு தொடர் வண்டிகளை இயக்க வேண்டும்.

ராணுவ தளவாட தொழிற்சாலை, தொடர் வண்டி பெட்டி தொழிற்சாலைகளை ஒசூரில் தொடங்கினால் சிறு, குறு நிறுவனங்கள் வளர்ச்சி பெறும். பெங்களூரிலிருந்து அத்திப்பள்ளி வரை இயக்கப்படும் மெட்ரோ தொடர் வண்டி திட்டத்தை ஒசூர் வரை நீட்டிக்க வேண்டும்.

இதன்மூலம் ஒசூரில் இருந்து பெங்களூருக்கு நாள் தோறும் சென்று வரும் தொழிலாளர்கள் பயனடைவர். பெங்களூரிலிருந்து சேலம் வரை இரட்டை தொடர் வண்டிபாதை அமைக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை ஒசூரில் தொடங்க வேண்டும்.

ஒசூர் தொழிலாளர் மருத்துவ காப்பீடு (தொ.ம.கா) மருத்துவமனையில் 1.10 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 33 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், 6 மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர். ஒசூர் தொ.ம.கா மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கான பொருள் மற்றும் சேவை வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும்