IoT என்றால் என்ன?
IoT என்றால் என்ன?
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்

IoT என்றால் என்ன?

இன்டெர்நெட் அப் திங்ஸ் அல்லது ஐ ஓ டி என்றழைக்கப்படும் தொழில் நுட்பம் யாதெனில், இணைய இணைப்புகளை கணிணி மற்றும் திறன் கை பேசிகளின் பயன்பாடுகளை தாண்டி, நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்துனை செயல்களுக்கும் பயன்படுத்த உதவும் தொழில்நுட்பமாகும்.

சோசப் விசய், நண்பன் படத்தில் புத்தகதிற்கு விளக்கம் சொல்வது போல் சொல்வதானால்

“இன்டெர்நெட் ஆப் திங்ஸ் – IoT என்பது, மனிதனுக்கு மனிதன் அல்லது மனிதனுக்கும் கணிணிக்கும் என தொடர்பு என்று இல்லாது, தனித்த குறிப்பான் கொண்ட இயந்திரம் மற்றும் இலக்கமுறை (Digital) இயந்திரம், பொருட்கள், மிருகங்கள் மற்றும் மனிதன் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பாக்கி, அவை வலைப்பின்னலில் தரவுகளை ஒன்றுக்கொன்று வழங்கிக்கொள்ள ஏதுவாக்கும் ஒரு அமைப்பு ஆகும் “

தாங்கள் இந்த இணைய பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் இணையத்தில் இணைந்துள்ளீர்கள்.

நீங்கள் இணைந்துள்ள இந்த இணையம் கோடி கருவிகள் ஒன்றினைந்து ஒன்றுக்கொன்று தகவல் வழங்கி செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அதாவது, தாங்கள் இந்த பக்கத்தை படித்துக்கொண்டிருக்கும் கணிணி அல்லது கை பேசி, பல கோடி கருவிகள் கொண்ட குழுவில் ஒன்றாக இருக்கிறது!!!

பழைய நுட்பம்:

பழைய தொழில் நுட்பத்தில், நம்மால் மின்னனு கருவிகளை கைபேசியில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பி கட்டுப்படுத்துவதாகும்.

இந்த தொழில் நுட்பமானது GSM தொடர்பு பயன்படுத்தி செயல்படுகிறது.

IoT தொழில் நுட்பம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது.

IoT என்றால் என்ன? தொழில் நுட்ப விளக்கம்:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பல மின்னனு தொழில் நுட்பம் இன்றி இருக்கும்.

மின்னனு பொருளாக இருப்பினும் அவற்றில் இணையத்தில் இணைக்கும் நுட்பம் இருக்காது.

இவற்றை இணையத்தில் இணைந்து செயல்படும் வகையில் மேம்படுத்துக் கொள்ள வேண்டும்.

நமது பயன்பாட்டுக் கருவிகளுடன் உணர்விகள் (Sensors) பொருத்தப்பட வேண்டும்.

இந்த உணர்விகள் தான், நமக்கு இந்த கருவிகளின் செயல்பாட்டை நிகழ் நேரத்தில் தகவல் தந்து கண்காணிக்க உதவுகிறது.

பொருட்களை இணையத்தில் வடம் (wire) அல்லது வடம் இல்லா (wireless) மல் இணைக்க வேண்டும்.

இவ்வாறு இணையத்தில் இணைந்த பொருட்கள், இணைய இணைப்பில் இருப்பதால், அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தில் இணைந்த திறன் கை பேசி அல்லது கணிணி உதவி கொண்டு கட்டுப்படுத்தலாம்.

மேலும், நிகழ் நேரத்தில் அவற்றின் செயல்பாடுகளையும் கண்காணிக்கலாம்.

இதற்கு இணைய உலாவி (Internet Browser) போதுமானது. சிலர் இதற்கென செயலி (App) களை வடிவமைத்து தருகின்றனர்.

பயன்

நாம் அன்றாடம் அடுக்களையில் பயன்படுத்தும் மிக்சி, மாவு அறைக்கும் இயந்திரம், மின் தூண்டல் முறை அடுப்பு (Induction Stove), தொலைக்காட்சி பெட்டி, மின் விளக்குகள், மின் விசிரி மற்றும் பல்லாயிறக்கனக்கான நாளது பயன்பாட்டுக் கருவிகள் இணையத்தில் இணைந்தால் அவற்றை நம்மால் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்த இயலும் அல்லவா?

எடுத்துக்காட்டாக, தங்கள் தோட்டத்து நீர் உந்தியை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்தே இயக்க இயலும்.

மேலும் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்பதை நிகழ் நேரத்தில் கண்காணிக்க இயலும் என்றால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

ஆம், இந்த இன்டெர்நெட் அப் திங்ஸ் பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் இயக்க முடியும், செயல் நிருத்த முடியும், மேலும் நிகழ் நேரத்தில் அவற்றின் செயல்பாட்டை கண்காணிக்க இயலும்.

நீங்கள் பயணம் மேற்கொண்டுள்ளீர்கள் என்றால், உங்கள் வீட்டு தோட்டத்து நீர் உந்தியை நீங்கள் பயணம் மேற்கொண்டுள்ள இடத்தில் இருந்தே முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

இந்த இன்டெர்நெட் அப் திங்ஸ் பயன்படுத்தி நீர் உந்தப்படுகிறதா, உந்தி முறையாக செயல்படுகிறதா, எந்தளவிற்கு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டுள்ளது, தோட்டத்து வெப்ப நிலை, என, அணைத்தையும் நிகழ் நேரத்தில் அறிய முடியும்.

மேலும், தங்களின் வண்டிகளை கூட இன்டெர்நெட் அப் திங்ஸ் பயன்படுத்தி அவை எந்த வேகத்தில் எந்த இடத்தில் எந்த வெப்ப நிலையில் பயணிக்கிறது என்று கண்கானிக்கலாம்.

தொழிற்கூடங்களில், இயந்திரங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம்.

தொழிலாளர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை புள்ளி விவரத்துடன் கண்காணிக்கலாம்.

ஒரு தரவாக இவற்றை சேமித்து எப்பொழுது வேண்டுமானாலும் இந்த புள்ளி விவரங்களை பயன்படுத்தலாம்.

மேலும், மென் பொருள் கொண்டு இயங்கும் சி-எந்சி இயந்திரம் போன்றவற்றில், நிரல்களை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றி அவற்றை கட்டுப்படுத்தலாம்.

வீடு முதல் காடு வரை அனைத்தையும் தொலைவில் இருந்து கட்டுப்படுத்த இயலும்.