படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே குண்டுகுறுக்கி ஊரில் மின்வாரிய ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகாறாரில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சூளகிரி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒசூர் அடுத்த சூளகிரி அருகேயுள்ள குண்டுகுறுக்கி ஊரைச் சேர்ந்தவர் சக்கரலப்பா (45) இவர் உத்தனப்பள்ளியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர். சக்கரலப்பாவிற்கு குண்டுகுறுக்கி ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கமுக்கமான தொடர்பு இருந்துள்ளது. அவ்வப்போது அவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை குண்டுகுறுக்கி ஊரிலுள்ள ஒரு மாட்டு கொட்டகையில் சக்கரலப்பா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனைப்பார்த்த ஊர் மக்கள் சக்கரலப்பாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர்.

மேலும் இதுகுறித்து சூளகிரி காவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. காவலர்கள் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகறாரில் அவர் சக்கரலப்பாவை அடித்து கொலை செய்து அருகிலுள்ள மாட்டு கொட்டகையில் போட்டு சென்று விட்டார் என உறவினர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து சூளகிரி காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை நிகழ்வு குறித்து சூளகிரி காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.