Karadi – Bear near Hosur, farmers worried

42
Bear - Black Color - File Photo
Bear - Black Color - File Photo

While, its usual, if farmers come across elephants, boar, fox, cheetah and other animals.  But, its very rare, bear visiting Hosur and its surroundings.

Cheenivasan has taken leese of a farm land near Saang-raang-kana-palli village near Thenkanikottai.

It is said that, almost all wild animals used to visit his land and hence he used to stay in the land so as to chase them away from spoiling the crops.

On the event day, a bear has visited the land, seeing which, Cheenivasan has ran at the maximum speed that he can, in which he fell down and got injured.  Another farmer, Murugan, too has seen the bear and has run for safety.

As they informed forest officials, they came to the spot and analyzed the foot prints of the animal.

தேன்கனிக்கோட்டை அருகே உழவு நிலத்திற்கு வந்த கரடி, உழவர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர்

கிருட்டிணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உழவு நிலத்திற்கு வந்த கரடியை கண்டு உழவர்கள் 2 பேர் தப்பி ஓடி உயிர் பிழைத்தார்கள்.

தேன்கனிக்கோட்டை வட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ளது சாப்ராங்கனப்பள்ளி என்கிற ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன்.  அவர் ஒரு உழவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த திருமதி என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழவு செய்து வருகிறார். இந்த நிலத்திற்கு யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி வருவதால் சீனிவாசன் விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முந்தைய நாள் இரவு சீனிவாசன் தனது நிலத்தில் இரவு காவலுக்கு இருந்தார். அப்போது திடீரென்று கரடி ஒன்று அங்கு வந்தது. கரடியை கண்ட சீனிவாசன் அலறி அடித்து அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். இதில் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதே போல பஞ்சப்பள்ளியைச் சேர்ந்த முருகன் என்பவரையும் கரடி துரத்தியது. அவரும் தப்பித்து உயிர் பிழைத்தார். கரடி ஊருக்குள் வந்த தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகம், வன காப்பாளர் முனிராஜ் ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியில் பதிவாகி இருந்த கரடியின் கால் தடங்களை பார்வையிட்டனர்.

தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில் காட்டுப்பகுதியையொட்டி உள்ள ஊர் பகுதிகளுக்கு யானைகள், காட்டு பன்றிகள் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருந்த நிலையில் தற்போது கரடி வந்துள்ள நிகழ்வு அந்த பகுதி உழவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.