படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Drunken altercation lead to murder, in which two surrendered in Kelamangalam.

Three men had a booze near Kelamangalam on Deepavali day.  It is said that they had altercation in which two of them joined and killed the third.

Yesterday, villagers of Kopanapalli found Chowdappa lying in a pool of blood with cut injuries in his head.  Villagers took him to Thenkanikottai GH, where doctors started treating him.  He succumbed to injuries in an hour.

While police registered a case and were in search for the murderers, two men of the same village surrendered to Kelamangalam police.

ஒசூர் அருகே குடிகோதையில் விவசாயி வெட்டிக்கொலை : இரண்டுபேர் கெலமங்கலம் காவல்நிலையத்தில் சரண்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கோபனப்பள்ளி கிராமத்தில் குடிபோதையில் ஏற்பட்ட வாய்த்தகறாரில் விவசாயியை இரண்டு பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக இரண்டு பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகேயுள்ளது கோபனப்பள்ளி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சௌடப்பா இவர் நேற்று இரவு கிராமத்தின் அருகேயுள்ள சாலையில் தலையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அநத வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த செளடப்பாவின் தலை மற்றும் உடலில் பல வெட்டுக்காயங்கள் இருந்தததால் இதுகுறித்து கெலமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கோபனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பாப்பன்னா மற்றும் சிவசங்கர் ஆகிய இருவரும் இந்த கொலை தொடர்பாக கெலமங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.