Kelavarapalli Dam opened for irrigation
Kelavarapalli Dam opened for irrigation
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்
Kelavarapalli Dam opened for irrigation
Kelavarapalli Dam opened for irrigation

District collector opened the shutters of Kelavarapalli dam to let water out for irrigation purpose.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து வலது புற மற்றும் இடது புற பிரதான கால்வாய்களில் 2013ம் ஆண்டு முதல்போக பாசனத்திற்காக 150 நாட்களுக்கு தண்ணீரை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.டி.பி.ராஜேஷ், இ.ஆப.., அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கெலவரப்பள்ளி நீர்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடது புற பிறதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக 8000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் ஜுலை மாதம் 15.07.2013 முதல் டிசம்பர் 12.12.2013 வரை 150 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது..  கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் தற்போது உள்ள நீரின் அளவினை கொண்டும், எதிர்வரும் பருவமழையினால்  வரும் நீர்வரத்தினை எதிர் நோக்கியும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து இடது புற கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய் மூலம் 5918 ஏக்கரும், வலது புற பிரதான கால்வாய் மூலம் 2082 ஏக்கரும் ஆக மொத்தம் 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடைகின்றன.  இதன் மூலம் ஒசூர் வட்டத்திலுள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்தமுத்தாளி,   முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்கள்  பாசன வசதி பெறுகின்றன.

மேலும் அணையின் நீர் இருப்பு மற்றும் எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டும், 150 நாட்களுக்கு முறை வைத்து முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த ஐந்து நாட்கள் நிறுத்தியும் நீர் வழங்கப்படும். கெலவரப்பள்ளி அணையின்  இடது புற பிரதான கால்வாயில் 62  கன அடி /வினாடி வீதமும், வலதுபுற பிரதான கால்வாயில் 26 கனஅடி/வினாடி வீதமும் ஆக மொத்தம் 88 கன அடி /வினாடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவு 278.42 மி.க.அடி ஆகும்.  அணையின் தற்போதைய நீர்மட்டம் 38.05 அடி ஆகும்.   அணையில் முதல் போக பாசனத்திற்காக 2013 ஜுலை மாதம் 15ம் நாள்  கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

விவசாயத்திற்கு மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், விவசாயிகள்  நீர் பங்கீட்டில்  பொதுப்பணித்துறையினருக்கு  முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.டி.பி.ராஜேஷ், இ.ஆ.ப., அவர்கள்  கேட்டுக் கொண்டார்.  மேலும் விவசாயிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சயின் ஒசூர் சார் ஆட்சியர் திரு.பிரவின் பி.நாயர், இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.அசோக்குமார், ஒசூர் நகர்மன்ற தலைவர் திரு.பாலகிருஷ்ணரெட்டி, ஒன்றியக்குழு தலைவர் திருமதி.புஷ்பாசர்வேஷ்,   செயற்பொறியாளர் திரு.வி.ஜகன்நாதன், உதவி செயற் பொறியாளர் திரு.வி.சாம்ராஜ், உதவி பொறியாளர் திரு.எஸ்.பார்த்திபன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் திரு.பி.சுப்பைய்யா, திரு.வ.தங்கராசு, ஒசூர் வட்டாட்சியர் திரு.அமீதுல்லா, கெலவரப்பள்ளி நீர்தேக்க பாசனசங்க தலைவர்கள் திர.ராஜப்பா, திரு.நாராயணசாமி, திரு.வெங்கடசாமி, திரு.சின்னப்பா, திரு.முனிராஜ், திரு.பிரகாஷ்  மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.