படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Prevention is better than cure, a very old proverb. Still, our PWD officials are yet to learn this it seems.

Very frequently canals of Kelavarapalli dam breaches, wasting lacs of liter water.

While officials had no idea in making the canals strong, its farmers who use the water to irrigate the land, has requested the government to take required action to make the canals strong, instead of patching up the parts, which breaks out.

The water in Thenpennai aaru, which runs via Kelavarapalli dam crosses Krishnagiri, Dharumapuri, Thiruvannamalai, Vizupuram and Cuddalur, feeding water to several thousand hectares of agriculture land.

In and around Hosur along the river feeds water to about 8000 hectares of land.

அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க கெலவரப்பள்ளி அணை கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும் : ஒசூர் பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை

கெலவரப்பள்ளி அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க அதிக நிதியை ஒதுக்கி கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும் என ஒசூர் பகுதி விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தெண்பெண்ணை ஆறு தமிழகத்தில் ஒசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுர் ஆகிய மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை செழிக்க வைக்கிறது.

ஒசூர் அருகே தெண்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு ஒசூர் பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், ராகி, தக்காளி, பீன்ஸ், உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பெரியமுத்தாலி கிராமத்தில் அணையின் இடதுபுற கால்வாய் கரையில் உடைப்பு ஏற்ப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சிமெண்ட் கரைகள் அமைக்கும் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டனர்.

அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும் கால்வாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை கரைகள் உடைகிறது. கால்வாய் கரைகள் பலவீனமாக இருப்பதே உடைப்பு ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.

எனவே தமிழகஅரசு அதிக நிதியை ஒதுக்கி கெலவரப்பள்ளி அணை கால்வாய்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும். அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுத்து தண்ணீர் வீணாவதையும் தடுக்க வேண்டும் என ஒசூர் பகுதி விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.