படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூரில் அனைத்து இந்திய விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங்தள்  அமைப்பின் சார்பில் கிருட்டிணர் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இதனையட்டி 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர் மற்றும் ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்று கிருட்டிணர் ராதையை வழிபட்டனர்.

நாடு முழுவதும் நேற்று கிருட்டிணர் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி வீடுகள் மற்றும் கோயில்களில் குழந்தைகளின் பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது வழக்கமாகும்.

அதேபோல கிருட்டிணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார் என்பதற்காக கிருட்டிணர் பிறப்பு விழாக்களில் அனைத்து வகையான பலகாரங்கள் அவருக்கு படைக்கப்படும்.

ஒசூரில் அனைத்து இந்திய விசுவ இந்து பரிசத் அமைப்பின் சார்பில் கிருட்டிணர் பிறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இதனையட்டி கிருட்டிணர் ராதா சிலைகள் சிறப்பு அலங்காரங்களில் வடிவமைக்கப்பட்டு பழங்கள் மற்றும் பலகாரங்கள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஒசூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான அவ்வமைப்பைச் சார்ந்தவகள் சென்று வழிபாடு நடத்தினர்.

அதேபோல கிருட்டிணர் பிறப்பு அன்று குழந்தைகள் கிருட்டிணரை வழிபட்டால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்,. நல்ல உடல் நலத்துடன் வாழ்வார்கள் என்பது நம்ப்பிக்கை.

அதன் அடிப்படையில் ஒசூரில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கிருட்டிணர் மற்றும் ராதா வேடமிட்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அனைவரும் கிருட்டிணரை வழிபட்டனர்.

இந்த நிகழ்வில் அனைத்து இந்திய விசுவ இந்து பரிசத் மற்றும் பச்ரங்தள் அமைப்பை சோந்தவர்கள் கலந்து கொண்டனர்.