கோட்டை மாரியம்மன் கோவில், ஓசூர். Kottai Mariyamman Temple, Hosur
கோட்டை மாரியம்மன் கோவில், ஓசூர். Kottai Mariyamman Temple, Hosur
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 3 நிமிடங்கள்

அருள் மிகு கோட்டை மாரியம்மன் கோவில், ஓசூர்

முகவரி: இராம் நகர், தேன்கனிக்கோட்டை சாலை, ஓசூர் 635109
தொ பே:
தொடர்பு கொள்ள:
வழிபாட்டு நேரம்: காலை 5 முதல் நடுப்பகல் 12 வரை
வரைபடம்: வரைபடத்தில் காண்க

“மாரி” என்றால் தமிழில் மழை என்று பொருள்படும்.

மழையை தமிழர்களுக்கு தருவித்து தருபவள் மாரி அம்மா – அவளே ஓசூரில் மாரி அம்மனாக எழுந்தருளியுள்ளார்.

சித்திரை – வைகாசி திங்கள்களில், பொதுவாக தமிழகம் முழுவதும் மாரி (மழை) அம்மாவிற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இத்தகைய விழாக்களால் மழையின் கடவுளான மாரி அம்மா தமிழர்களுக்கு மும்-மாரி பொழிவாள்.

இன்றைய நாட்களில், மழையை தருபவள் மழை கடவுள் மாரி அம்மா என்பது அறியாது, அவளிடம் மழையை வேண்டாமல், காசு பணம் வேண்டுவதாலோ என்னவோ, தமிழகத்தில் மழை தொடர்ந்து பொய்த்து வருகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை திங்களில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஓசூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்நாளில், ஒசூருக்கு அரசு உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்.

இந்த கோவிலினுள், பிளேக் மாரியம்மன், டெங்கு மாரியம்மன், மலேரியா மரியம்மன் என பக்தர்கள், தங்களின் நோய்களை குணப்படுதியமைக்கு நன்றியாக பலவாராக மாரி அம்மனை வழிபடுகின்றனர்.

1970 ஆண்டு வாக்கில், அத்திப்பள்ளி பகுதியில், பிளேக் நோய் தாக்கி பலர் மடிந்ததால், நம்பிக்கையாளர்கள் ஓசூர் மாரி அம்மனிடம் வேண்டி, தங்களை நோய் தாக்குதலில் இருந்து காத்துக்கொண்டரர். இதனால், பிளேக் மாரி அம்மன் என சிலை வைத்து இன்று வரை அம்மனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

மூகொன்டபள்ளி பகுதியில் மணல்வாரி (Rubella) நோய் தாக்குதல் கட்டுக்கடங்காமல் ஏற்பட்டு பல குழந்தை உயிர்கள் பலியாவதை கண்ட அப்பகுதி மக்கள், மணல் மாரி அம்மன் என்று சிலை அமைத்து இன்று வரை நன்றி செலுத்தி வருகின்றனர்.

சூளகிரி பகுதியில் ஆடு மற்றும் மாடு மந்தைகளை இடி-மின்னல், காட்டு விலங்குகள், நோய் இவற்றில் இருந்து அம்மன் காத்து வருவதால், மந்தை மாரி அம்மன் என வழிபட்டு வருகின்றனர்.

இன்றைக்கு கோட்டை மாரி அம்மன் கோவில் இருக்கும் இடத்தில் வெள்ளைகாரர்கள் அமைத்த மாபெரும் கோட்டை ஒன்று 1960-களின் கடைசி வரை இருந்துள்ளது. அந்தை வெள்ளைக்கார துரை பிரெட் என்பவர் கட்டியுள்ளார்.

உள்ளூர் மக்கள் அந்த கோட்டையை சூரையாடி, சிதலமாக்கி சீரழித்துள்ளனர். இன்றும், அந்த கோட்டையின் பாலம் மட்டும் மீதமுள்ளது.  மேலும்

Temple Festival Photos

Hosur Kottai Mariamman Temple

Hosur Kottai Mariyamman Festival

Kottai Mariamman - Hosur Temple Festival

Hosur Kottai Mariamman Temple

Kottail Mariamman

Kottai Mariamman Temple