Hosur ATMs
Hosur ATMs
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Even after 40 days of making 500 and 1000 denomination notes as invalid, people still stand in queue to take their hard earned money from banks, as most of  Hosur ATMs and banks still remain dry.

Out of 80 ATMs belonging to both private and government banks, hardly 5 ATMs work for few hours, making life of poor and needy, in particular those who receive low salary like Rs 10,000 per month suffer a lot.

Sufferings of daily wage workers has no limit to say, as they roam around Hosur like beggars to cash their own money.

Unplanned merciless act of PM Modi has put people into suffering.

ஓசூரில் ஏடிஎம்கள் இயங்காததால் தொழிலாளர்கள் அவதி

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஓசூரில் தொழில்கள் முடங்கி  உள்ளன. மேலும் இங்கு பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் கூட வாங்க வழியின்றி தவிக்கின்றனர்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் கடந்த மாதம் அறிவித்தார். இந்த அறிவிப்பால் கடந்த ஒரு மாதமாக மக்கள் சிரமப்படுகிறார்கள். ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் பணிபுரிய கூடிய தொழிலாளர்கள் அங்குள்ள ஏ.டி.எம். மையங்களில் தங்களின் சம்பள பணத்தை எடுத்து கொள்ள வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஓசூர் சுற்று வட்டாரத்தில் பகுதியில் 80 ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலனைவை இயங்க வில்லை. அதில் பணம் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகிறார்கள். வீட்டு வாடகை, பால்,மளிகை கடை என பல இடங்களில் கடன் வைத்துள்ளவர்கள் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

நகரின் மத்தியில் உள்ள ஒரு சில ஏடிம் மையங்கள் மட்டும் நேற்று இயங்கின. பல ஏடிம்கள் இயங்க வில்லை இதனால் பொது மக்கள் பலர் கஷ்டப்பட்டனர்.