Hosur Murdered Person Balu
Hosur Murdered Person Balu
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

A young man’s dead body was found near Alasanatham. The body had several deep cut injuries. HUDCO police is investigating.

Karpagam Nagar is located on the way to Thottagiri from Alasanatham.

In an open residential plot, two legs of a human body was noticed by the residence. Rest of the body was covered with stones.

HUDCO police was alerted and they started the investigation. Preliminary investigation has identified the dead as Balu (26). They body had 23 cut injuries.

Balu, a native of Anna Nagar area of Hosur has married 3 years ago and is now separated from his wife and was living along with his parents.

Police recovered the body and has sent the same to Hosur GH for postmortem.

Reason behind the murder is not yet known.

ஓசூரில் 23 இடங்களில் வாலிபர் வெட்டிக் கொலை

ஓசூரில் 23 இடங்களில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அலசநத்தம் உள்ளது. இங்கு தோட்டகிரி செல்லும் சாலையில் கற்பகம் நகர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள காலி நிலத்தில் நேற்று கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் ஒருவரின் பிணம் இருந்தது. அவரது உடல் முழுவதும் கற்களால் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கற்களை அகற்றி பார்த்தனர். அப்போது வாலிபர் ஒருவர் 23 இடங்களில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் ஓசூர் அண்ணா நகரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பாலு (26) என தெரிய வந்தது. சண்முகம் இறந்து விட்டார். பாலு அவரது அம்மா சாந்தி, தம்பி சிவா ஆகியோருடன் வசித்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த பாலு மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அவரது உடலில் தலை, கை, கால் என்று மொத்தம் 23 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தன. இதன் மூலம் அவர் சரமாரியாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அவரை யார் கொன்றார்கள்? என தெரியவில்லை. இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.