படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூர் அருகே மதகொண்டப்பள்ளியில் மாதிரி பள்ளியில் இன்று 72வது விடுதலை நாள் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி அரசர் சம்பத்குமார் கலந்து கொண்டு நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்கள் கல்வி பயிலும் போது சமூக பொருப்புகளை வளர்த்து கொள்ள வேண்டும், நாட்டுப்பற்று மிக்க மாணவர்களே வரும் கால இந்தியாவின் நல்ல தலைமைகளாக வருவார்கள், நாம் தற்போது 72வது விடுதலை நாளை கொண்டாடினாலும் நமது நாட்டில் பல்வேறு நிலைகளில் விடுதலை என்பது இல்லாமல் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழச்சிகள் நடைபெற்றது. வண்ண வண்ண ஆடைகளை அணிந்து மாணவர்கள் பரதம் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களுக்கு நடனங்களை ஆடி மகிழ்வித்தார்கள்.

இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.