Modi repeatedly ditch Tamils, why?

16
NDLF Protest against Modi and SC on Cauvery verdict
NDLF Protest against Modi and SC on Cauvery verdict

From day one  of taking office, Modi and his team work against Tamils, is what the people who gathered to demonstrated against Modi’s Supreme Court order on Cauvery issue, in Hosur felt.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டத்தில் இவ்வமைப்பின் முன்னணி தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

14.75 TMC தண்ணீரை குறைக்கப்பட்டது என்பது ஒரு லட்சம் ஏக்கரில் நீ பயிரிடாதே என்று பொருள். நிலத்தடி நீர் பயன்படுத்துங்றாங்க. ஆத்துல தண்ணி வந்தால்தான் நிலத்தடி நீர் மட்டம் வரும். இந்த உண்மையை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு உள்ளது. அடுத்து, தண்ணீர் தேசிய சொத்து, யாருக்கும் உரிமை கொண்டாட முடியாது என்கிறது, தீர்ப்பு.

இன்றைக்கு யதார்த்தத்துல தேசிய சொத்துன்னு சொல்ற பேங்க், ரயில்வே, பொதுத் துறை அவ்வளவும் அம்பானி, அதானி தரகு முதலாளி கையில போய்கிட்டேயிருக்கு. தண்ணீர் உரிமை கொண்டாட முடியாதுங்குறது சரி கிடையாது.

575 TMC தண்ணி அடுத்த 100 வருசத்துல 177 TMC யாக குறைந்து போச்சி. கர்னாடகவுல நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்காம், 97% குடிக்கிற தகுதி உள்ள தண்ணியாம். இந்த விவரங்கள் கணக்கில் எடுக்காம இந்த அரசு அதிகார கட்டமைப்பு எழுதி தந்த தீர்பை அப்படியே வாசித்துவிட்டார்கள் நீதிபதிகள். காவிரி மேலாண்மை வாரியம் விசயத்துல அமைக்காம இருக்கும் RSS மோடி அரசாங்கத்தை நீதிமன்றம் என்ன செய்யப் போவுது? கர்னாடகவுல மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதுங்குறாங்க.

அங்க காவிரி நதி நீர் என்பது ஓட்டு சீட்டு அரசியலின் துருப்பு சீட்டு ஆக்கிட்டாங்க. நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வாரியம் இருக்கு. காவிரிக்கு முடியாதுன்னா சரியா? பார்ப்பன எதிர்ப்பு தமிழ் நாட்டின் மீது மோடி கும்பலுக்கு எரிச்சல் இருக்கு என்பது வெளிப்படைய தெரியுது.

பண மதிப்பு நீக்கம், GST ஆதார் இவைகளை திணித்த அரசு அதிகாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காம இருக்குது என்றால்… இந்த அரசின் செயல்பாடு யாருக்கானது? அந்த பக்கம், RSS மோடி அரசாங்கம் தன்னை ஜெயிக்க வச்ச தரகு முதலாளிகள தப்பிக்கவைக்கவே நேரம் சரியாக இருக்கு. இது இவர்கள் மேலாண்மை வாரியம் அமைக்கவே மாட்டார்கள். தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாட்டாங்க. ஏன்னா மக்கள் சுயகாலில் நின்று பொழைக்கக் கூடாதுங்றது, மத்திய அரசின் கொள்கை.

நில வளங்களை கொள்ளையடிக்க பாரத் மாலா -ன்னு திட்டம் போட்டிருக்கு அரசு. நதிகள் தேசியமயம், நீர் பயணமுன்னு புளுகுறாங்க. மொத்ததில் தீர்ப்பு உள் நோக்கம் கொண்டது. இந்த அரசு கட்டமைப்பு டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி மீத்தேன் , ஹைட்ரோ கார்பன், நிலக்கரிய அள்ளி கிட்டு போக சாகர் மாலா திட்டம் போட்டு வச்சிருக்கு. அதுக்கு ஏற்ற தீர்ப்பு வாசித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் நாம் வாழனுமுன்னா, நாம் போராடணும். தமிழகம் எழுந்து நிக்கணும்.
இது சாப்பாடு விவகாரம். பட்டினியில தள்ளி மக்களை கொன்றுவிட அரசு தயாராக இருக்கு. பிரதமர், ஜனாதிபதி, ஆளுநர், உச்சநீதிமன்றம் ஆகிய அனைத்து அதிகரா உறுப்புகளும் தமிழகத்திற்கு எதிரானவைகளாக உள்ளது.

எனவே, மத்திய அரசின் அதிகாரத்தை ஏற்க மறுத்து தமிழகத்தின் தன்னுரிமைக்காக நாம் போராடுவதோடு மட்டுமின்றி இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் அதிகாரமாக எழுந்து மாற்றுக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வது ஒன்றே வழியாகும் என்பதை உணரவேண்டும்.