New public distribution shop (ration) opened yesterday at Hosur

18

Minister Balakrishnan inagurated a public distribution shop in Arasanati, Therpettai, Raaja Kanapathi Nagar HUDCO, Parvathi Nagar and Eri Karai. The shops have come with their own building which were constructed at a cost of Rs 33.24 lacs

Tamil Nadu Nukar PoruL Vaanipak Kazakam, runs Amutham Public Distribution shops. New building were constructed for Ration shops and all the six shops were inagurated by Balakrishnan, Minister of Kaal Nadai Thurai.

Krishnagiri district collector presided over the functions.

ஓசுர் சட்டமன்ற தொகுதி ஓசுர் நகராட்சி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டின் கீழ் கிருஷ்ணாநகர் – புதிய பகுதி நேர நியாய விலைக்கடை – அரசனட்டி, தேர்பேட்டை, ராஜகணபதி நகர் ஹட்கோ, முழுநேர நியாய விலைக்கடைகளுக்கு தலா ரூ. 5.86 லட்சம் வீதம் ரூ. 23.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4- புதிய கட்டிடங்கள் மற்றும்

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழகம் நடத்தும் அமுதம் நியாயவிலைக்கடைகள் பார்வதி நகர் மற்றும் ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் தலா ரூ.4.90 லட்சம் வீதம் 9.80 லட்சம் மதிப்பில் 2- புதிய கட்டிடங்கள் என
ரூ.33.24 லட்சம் மதிப்பிட்டில் 6 நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டிடங்களை மாண்புமிகு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.பா.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசுர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் நியாயவிலைக்கடை புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.கதிரவன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையும், ஓசு10ர் நகர் மன்ற தலைவர் திரு.மு.ராமு அவர்கள் முன்னிலையும் வகித்தார்கள்.

தொடர்ந்து ஒசுர் தேர்ப்பேட்டை பகுதியில் 835 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் முழுநேர நியாயவிலைகடை கட்டிடத்தையும்ää ஒசு10ர் அரசனட்டி பகுதியில் 847 குடும்பங்கள் பயனடையும் வகையில் நியாயவிலைக் கடை கட்டிடத்தையும்ää கிருஷ்ணாநகர் பகுதியில் 519 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பகுதி நேர நியாயவிலைக்கடை கட்டிடத்தையும் ராஜகணபதி நகர் ஹட்கோ பகுதியில் 750 – குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் நியாயவிலைக்கடை கட்டிடத்தையும் தலா ரூ.5.86 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ 9.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய 4 – கட்டிடங்களையும்ää

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டுப்பாட்டின் கீழ் ஒசு10ர் பார்வதி நகரில் 1069 குடும்ப அட்டை தாரர்கள் பயன் பெறும் வகையில் செயல்பட்டு வந்த அமுதம் நியாயவிலைகடை மற்றும் ஏரிக்கரைப் பகுதியில் 914 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் செயல் பட்டு வந்த நியாய விலைக்கடைகளுக்கு தலா ரூ.4 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சர் திரு.பா.பாலகிருஷ்ணாரெட்டி அவர்கள் ஒசு10ர் பகுதிவாழ் மக்களின் நலன் கருதி திறந்து வைத்தார். இந்த நியாயவிலைக்கடைகளின் மூலமாக 5ää930 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.க.பாண்டியன்ää மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.இராஜேந்திரன் துணைப்பதிவாளர் திரு.வை.மு.ரவிச்சந்திரன்ää சார்பதிவாளர்கள் திரு.மோகன்ää திரு.வேலாயுதம்ää வட்டாட்சியர் திரு.தியாகராஜன்ää வட்ட வழங்கல் அலுவலர் திரு.சுப்பிரமணிää தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் திரு.எம்.நாகராஜ்ää துணைத்தலைவர் திரு.என்.குபேரன் (எ) சங்கர்ää தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் செயலர் திரு.கே.வேலுää திரு.ரகுராமகிருஷ்ணன்ää ஒசு10ர் நகர்மன்ற உறுப்பினர்கள் திரு.லோகநாதன்ää திருமதி.ரோஜாபண்டியன்ää உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.