படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூர் அருகேயுள்ள பேரண்டப்பள்ளி கொத்தூரில் 4 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் பாப்பாச்சி என்பவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த அந்த  சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை ஓசூர் காவலர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் மூலம் ஆய்வு செய்தார்கள்.

இந்த நிகழ்வு குறித்து சிறுமியின் பெற்றோர்  அளித்த புகாரின் பேரில் ஓசூர் பெண்கள் காவல் நிலைய காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.