Hosur Government Hospital
Hosur Government Hospital
Hosur Government Hospital
Hosur Government Hospital

Poor and needy people who visit Hosur government hospital to take treatment for different diseases are asked to by syringe from outside medical shops, though enough stocks are piled up at the hospital.

When the matter was taken to higher officials of the hospital, the officials pointed out that there is enough stock of syringes in the hospital and if any staff found instructing patients to buy syringe from outside will be punished if reported by the patient.

To be noted here is that the hospital officials kept mum on this issue all these days, though it all happened in broad day lights by the staff of the hospital.

Several doctors working for this government hospital or other government hospitals in and around Hosur also practice in Ashok Hospital and Gunam Hospital, which are located just opposite to Hosur GH.

In many cases, relatives of patients are said to be advised to take the patient to such private hospitals for further treatments.

ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை ஊசி வாங்கி வரச்சொல்லும் ஊழியர்கள் : இருப்பு இருந்தும், அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ஊசி வாங்கி வர கூறுவதாக மருத்துவமனையில் ஊசிகள் இருப்பு இருந்தும் நோயாளிகளை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனை நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கிறார்கள்.

குறிப்பாக உடல் நலக்குறைவு காரணமாகவும், நாய்கடி, பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட பலரும் இங்கு வருகின்றனர், அதில் நாய்கடி, பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு ஊசி போடக்கூடிய ஊழியர்கள், ஊசியை (சிரிஞ்ச்) வெளியே போய் வாங்கி வரச்செல்வதாக நோயாளிகள் பலரும் புகார் தெரிவித்தனர்.

ரூ.5க்கு இந்த சிரிஞ்ச் ஊசி விற்பனை செய்யப்படுகிறது. பல கடைகளில் ரூ.10 கொடுத்தால், பாக்கி சில்லறை கொடுப்பதில்லை.

ஓசூர் அரசு மருத்துவமனையில் நாய்கடி, பாம்பு கடி போன்வற்றிற்கு போதுமான மருந்து இருப்பு உள்ளது. அதே போல ஊசி(சிரிஞ்சு)களும் போதுமான அளவு இருப்பு உள்ளது. ஆனாலும் எதற்காக வெளியே போய் வாங்கி வரச்சொல்கிறார்கள் என தெரியவில்லை என்று நோயாளிகள் பலரும் வேதனையுடன் தெரிவித்தார்கள்.

இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்ட போது ஓசூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள், ஊசிகள் இருப்பு உள்ளன. ஊழியர்கள் யாரேனும் ஊசிகள், வெளியே போய் வாங்கி வரச்சொன்னால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்