படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

Relatives of Muniraj, who was murdered two days ago, was not accept the theory of those two who has surrendered with Uththanapalli police.

According to Cheenivasan and Nagaraj of Uppartham Mandarapalli village, they murdered Muniraj due to some land related dispute.  The duo claimed that, they murdered muniraj with a sword and locked the body in the office room of Muniraj and came to the police station to surrender.

Police, quickly arrested the two men and took custody of the body and sent the same to Hosur GH for postmortem.

Meanwhile, relatives of Muniraj and villagers are not ready to accept that Cheenivasan and Nagaraj as the accused.  They claim that, the real accused are hiding.

As the villagers blocked the Hosur Rayakottai road, MLAs Thally Prakash, Veppanapalli Murugan, Thenkanikottai DSP Soundar Rajan rushed to the spot and held negotiation with the people.  Later the crowd dispersed agreeing with the officials who promised action.

ஓசூர் அருகே கல்குவாரி தொழில் அதிபர் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க கோரி பொது மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கார்கொண்டபள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் இவர் தொழிலதிபர். இவரை அவரது கல்குவாரி அலுவலகத்ததில் இருந்த போது  சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது.

இந்த கொலையை உப்பர்தம்மண்டரப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், சீனிவாசன் ஆகியோர் செய்ததாக கூறி அவர்கள் இரண்டு பேரும் உத்தனப்பள்ளிகாவல் நிலையத்ததில் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல.  உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என கோரி அப்பகுதி பொது மக்கள் ஓசூர்  ராயகோட்டை சாலையில் உள்ள பைரமங்கலம் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது வாகனங்கள் இரு பக்கமும் நின்றது. இதனால் போக்குவரத்து 3 மணி நேரம் முடங்கியது.

இது பற்றி தெரிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி வீரராகவன், தேன்கனிக்கோட்டை துனை காவல் கண்கானிப்பாளர் சவுந்தர்ராஜன், இதைப்போல தளி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமரசம் செய்தனர்.

அதன் பின்னர் அனைவரும் கலைந்து செனறனர்.