பயர்பாக்ஸ் உலாவியின் தாவல்களை மேலான் செய்ய Manage Firefox Tabs
பயர்பாக்ஸ் உலாவியின் தாவல்களை மேலான் செய்யManage Firefox Tabs
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

தாவல்களை தவறவிடாமல் மோசில்லா பயர் பாக்ஸ் இணைய உலாவியை மறுதொடக்கம் செய்வது எப்படி?

பயர் பாக்ஸ் உலாவியில் இணைய பக்கங்களை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். புதிது புதிதாக பக்கங்களை தாவல்களில் திறந்து விட்டீர்கள். இப்பொழுது உலாவியின் வேகத்தில் தொய்வு ஏற்படுகிறது.

இத்தகைய சூழலில், உலாவியை மீட்டமைத்தால் சிக்கல் சரியாகிவிடும்.

பார்க்க வேண்டும் என்று பல பக்கங்கள் உலாவியின் தாவல்களில் உள்ளது. உலாவியை மறுதுவக்கம் செய்தால் எல்லாம் போய்விடும்.

பின்பு எல்லா பக்கங்களையும் ஒவ்வொன்றாக தேடி கண்டுபிடித்து திறக்க வேண்டி வரும்.

நாம் இதை விரும்ப மாட்டோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கங்களை விட்டு விடாமல், எப்படி உலாவியை மறுதுவக்கம் செய்வது? இதற்கு தீர்வு உள்ளது.

முதல் தீர்வு:

மொசில்லா பயர்பாக்ஸ் உலாவி, பயணர்களின் தன் குறிப்பு தகவல்களை மேலான்மை செய்வதற்கு என்று தனி பக்கம் கொண்டுள்ளது.

இந்த பக்கத்தை கொண்டு நாம் பயர்பாக்ஸ் உலாவியை மறுதுவக்கம் செய்யலாம்.

பயர்பாக்ஸ் உலாவியை மறுதுவக்கம் செய்ய
பயர்பாக்ஸ் உலாவியை மறுதுவக்கம் செய்ய

1. பயர்பாக்ஸ் உலாவியின் முகவரி பட்டையில், about:profiles என்று தட்டச்சு செய்து, Enter தட்டவும், இது தன் குறிப்பு தகவல் பக்கத்தை திறக்கும்.

2. இதில் “Restart normally” என்ற பொத்தானை சொடிக்கினால், பயர்பாக்ஸ் உலாவி மறு துவக்கம் செய்யும்.

இந்த வகையில் மறு துவக்கம் செய்யும் போது, நாம் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்த அனைத்து தாவல்கள் மற்றும் சாளரங்களும் மீண்டும் துவங்கும்.

கவணிக்க: நீங்கள் ‘Restart with Add-ons Disabled…’ என்ற பொத்தானை சொடிக்கினால், உலாவியில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களின் நீட்டிப்புகள் மற்றும் சேர்க்கைகள் தவிர்க்கப்பட்டு, உலாவி தாங்கள் பயன் படுத்திக்கொண்டிருந்த தாவல்கள் மற்றும் சாளரத்துடன் மீண்டும் துவங்கும்.

நம்மை அறியாமல், சில வேளைகளில் தேவையற்ற மூன்றாம் நபர் நீட்டிப்புகள் மற்றும் சேர்க்கைகளை பதிவிறக்கி செயல் படுத்தியிருப்போம். இவ்வாறு உலாவியை மறு துவக்கம் செய்வதன் மூலம், உலாவி ஏன் கூடுதலாக நினைவகத்தை பயன்படுத்துகிறது என்பதை அறிந்து, தேவையற்ற நீட்டுப்புகள் மற்றும் சேர்க்கைகளை நீக்கலாம்.

இரண்டாம் தீர்வு:

பயர்பாக்ஸ் உலாவி ஒரு கமுக்கமான் பக்கத்தை உள்ளடக்கி வைத்துள்ளது.

அந்த பக்கம், உலாவியை புதிப்பிப்பு செய்யும் போது மட்டும் இயங்கும்.

உலாவியை மறு துவக்கம் செய்ய Firefox RestartRequired
உலாவியை மறு துவக்கம் செய்ய Firefox RestartRequired

அந்த பக்கத்தை, நாம் நேரடியாக அணுகி, நாம் உலாவியை மறு துவக்கம் செய்யலாம்.

  1. about:restartrequired என்று உலாவியின் முகவரி பட்டையில் தட்டச்சு செய்யுங்கள். பின்பு ‘Enter’ தட்டுங்கள்.
  2. அது ஒரு பகத்தை திறக்கும்.
  3. திறந்த பக்கத்தில் ‘Restart Firefox’ என்ற பொத்தான் இருக்கும். அதை சொடுக்குங்கள்.
  4. இந்த வகையில் மறு துவக்கம் செய்யும் போது, நாம் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டிருந்த அனைத்து தாவல்கள் மற்றும் சாளரங்களும் மீண்டும் துவங்கும்.