ஓசூரில் காலியை கடத்திச் சென்று படுகொலை

45 இடங்களில் சரிமாரியாக குத்தி கொலை செய்து வீசிய கொடூர நிகழ்வு

473
Hosur காவாலி Rowdy Jayanth
Hosur காவாலி Rowdy Jayanth

ஓசூர் அருகே காவாலி செயந்-தை கடத்திச் சென்ற மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக உடலின் 45 இடங்களில் குத்திக் கொன்று உடலை தோப்புக்குள் வீசிச் சென்றுள்ளது.

ஓசூர் அருகே கருநாடக எல்லையான அத்திப்பள்ளியை அடுத்த மாயசந்திரம் ஊரைச் சேர்ந்தவர் காவாலி செயந்.

ஓசூர் மற்றும் அத்திப்பள்ளி பகுதிகளில் பிரபல காவாலியான இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவலர்களின் காவாலிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

செயந்-தைப் போன்றே அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் மற்றொரு காவாலி சுமில். இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த ஒர் ஆண்டுற்கு முன்பு இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது. ஆனால் சிலநாட்களில் அவர்கள் இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர்.

இந்நிலையில் நேற்றைய முந்திய நாள் இரவு செயந்-தை சுனில் தரப்பினர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அத்திப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், சுனில் தரப்பினர் மீது தங்களுக்கு சங்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஓசூர் அருகே தமிழக – கருநாடக எல்லையான சலட்டிகானப்பள்ளி என்ற ஊர் அருகே உள்ள தோப்பில் ஜெயந்த் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 45 இடங்களில் கத்திக்குத்துகள் விழுந்திருந்தன.

மேலும் கண்ணாடி பாட்டிலால் உடலில் குத்தப்பட்டும், கை, கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டும் இருந்தன. இதைத் தொடர்து காவலர்கள் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்கு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செயந் மற்றும் சுனில் தரப்பினரிடைய ஏற்பட்ட மோதல் காரணமாக சுனில் கூட்டாளிகள் செயந்-தை வண்டியில் கடத்தி சென்று கொன்று, பின்னர், உடலை தோப்பில் வீசி சென்றது காவர்களின் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்து காவலர்கள் சுனில் உட்பட அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.