படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை சேர்த்திட வலியுறுத்தி ஒசூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள நடுவத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி துவக்கி வைத்தார். இந்த பேரணியில் ஓசூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், அவர்களுக்கு அரசின் சலுகைகளை பெற்றுத் தர வேண்டும் என அனைவரும் பதாகைகளை கைகளில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பி சென்றனர். மேலும் அவர்கள் பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர்.

ஒசூர் காமராசர் காலணியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, உழவர் சந்தை, வட்டாட்சியர் அலுவலக சாலை, உள்ளிட்ட பல்வேறு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று இறுதியாக பள்ளியில் நிறைவடைந்தது.