படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

A story, that is supposed to be the story of Ajith starrer Vedhalam Story is being circulated on the internet.

Though there is no official confirmation by either Thala Ajith or any of Vedhalam team members, here below is the story that might be the Vedhalam Story – mostly not!!!

இப்படத்தில் அஜித் கார் டிரைவராக, பரம சாது போன்று நடிக்கிறார். தங்கை லட்சுமிமேனன் மீது அதிகபாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமிமேனனுக்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காக தங்கையுடன் கொல்கத்தாவுக்கு குடிபெயருகிறார் அஜித். அங்கு சர்வதேச அளவில் கடத்தல் உட்பட பல குற்றங்களை செய்யும் கபீர்சிங், அஜித் வசிக்கும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். லட்சுமிமேனனின் கல்லூரித்தோழியாக வரும் சுருதிஹாசன், அஜித்தை ஒருதலையாக காதலிக்க தொடங்குகிறார். இதற்கு இடையே, ஒரு மோதல் சம்பவத்தால் கபீர்சிங்கின் ஆட்கள் அஜித் ஓட்டும் கால்டாக்சியில் போதைமருந்தை வைக்க, அதை போலீஸிடம் ஒப்படைக்கிறார் அப்பாவியான அஜித். இந்த விவகாரம் மீடியா மூலம் பெரிதாகி, போலீஸார் கபீர்சிங்கின் ஆட்களை கைது செய்கின்றனர். இதனால் கபீர்சிங்கின் கவனம் அஜித் மீதும், லட்சுமிமேனன் மீதும் திரும்புகிறது. தொடரும் தாக்குதல் சம்பங்களில் லட்சுமேனன் கொல்லப்பட, அஜித்தால் நடக்கமுடியாத நிலை ஏற்படுகிறது.

பிறகு ஸ்ருதிஹாசன், அஜித்தை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறார். அங்கே மருத்துவமனையில் அஜித்துக்கு விபரீத அனுபவங்கள் ஏற்படுகிறது. அவர் ஒரு ஆவி யை சந்திக்கிறார். அது… அஜித் நெம்பர் டு. இவர் அப்பாவி அஜித்துக்கு நேர்மாறாக, அடாவடி கெத்து அஜித்தாக இருக்கிறார். அவரது நண்பர்கள் சூரி மற்றும் அஸ்வின். ஊரில் பெரும் புள்ளியான பார்வையற்ற தம்பிராமையாவை பாதுக்காகிறது இந்த அணி.

தம்பிராமையாவின் சொத்துக்களை குறிவைக்கும் எதிரிகள் கெத்து இருக்கும் வரை அவரை நெருங்க முடியாது என உணர்ந்து, கெத்து அஜித்தின் நெருக்கமான நண்பரான அஸ்வினை துரோகியாக்கி, அஜித்தை கொடுரமாக வீழ்த்துகிறார்கள். ஆவி அஜித்தின் கதையை கேட்டு, முதலில் அவருக்கு உதவ முடிவு எடுக்கிறார், அஜித். சாது அஜித்தின் உடலுக்குள் கெத்து அஜித்தின் ஆவி புகுந்து கொள்ள, அப்புறம் என்ன பரபர பழிவாங்கும் படலம்தான். முதலில் லோக்கல் எதிரிகளை முடித்துவிட்டு, கொல்காத்தா, தாய்லாந்து என பறக்கிறார்கள் அஜித். வேதாள வேட்டை எப்படி என்பதே மீதிக்கதை.

சாதா அஜித் பழிவாங்கினாலே அதிரும். அதுவும் அமானுஷ்ய சக்திகள் படைத்த ஆவி, வேதாள அஜித் பழிவாங்கினால்…கேட்க வேண்டுமா… கெத்து அஜித், தல ரசிகர்களுக்கான ஸ்பெஷல் என்றால், தங்கை சென்டிமெண்ட், காதல் என்று வாழும் அமைதி அஜித் எல்லாருக்குமான கெட்டப். எல்லா எதிரிகளையும் முடித்த பின், அவ்வளவு தான் சுருதிஹாசனோடு செட்டில் ஆகிவிடலாம் என அஜித் நினைக்கும்போது மீண்டும் வருகிறது வேதாளம். வேறு ஒரு அசைன்மெண்டுக்கு.