ஓசூர் மாணவியின் புத்தகப் பையில் பாம்பு

பள்ளி வகுப்பறையில் மானவிகள் அலரல்

புத்தகப் பையில் பாம்பு Snake in School Bag
புத்தகப் பையில் பாம்பு Snake in School Bag
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஓசூர் மாணவியின் புத்தகப் பையில் பாம்பு இருந்ததால் பள்ளி வகுப்பறையில் மானவிகள் அலரல்

ஒசூர் அருகே மூகொண்டபள்ளியில் தனியார் பள்ளிக்கு வந்த மாணவியின் புத்தகப் பையில் பாம்பு இருந்ததால் பள்ளி வகுப்பறையில் பரபரப்பு ஏற்பட்டது.

மூக்கண்டபள்ளி காமராசர் நகரைச் சேர்ந்த மாணவி, அந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த நாள் திங்கள்கிழமை காலையில் மாணவி வழக்கம்போல பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகி, தனது புத்தகப் பையை வீட்டுற்கு வெளியே வைத்துள்ளார்.

காமராசர் நகர் பகுதி அருகே விளை நிலங்கள் உள்ளதால், அப்பகுதியில் இருந்து அந்த வழியாக ஊர் பகுதிக்கு ஊர்ந்து வந்த ஒரு பாம்புக் குட்டி, மாணவியின் புத்தகப் பையினுள் புகுந்துள்ளது.

பாம்பு தன் புத்த பையில் இருப்பதை உணராத மாணவி, புத்தகப் பையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

வகுப்பறைக்குச் சென்றதும், புத்தகங்களை எடுப்பதற்காக மாணவி, பையைத் திறந்து புத்தகங்களை எடுப்பதற்காக புத்தகங்களை அசைத்துள்ளார்.

அப்போது பாம்புக்குட்டியானது, வெளியே வந்துள்ளது. இதனைக் கண்டு அந்த மாணவி அலறி கூச்சல் எழுப்பியவாறு வெளியே ஓட, உடன் பயிலும் மானவிகளும் பாம்பை கண்டதும் தங்கள் உயிர் காக்க, கூச்சலிட்டவாறு வகுப்பரையை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

பின்னர் அந்த பாம்புக் குட்டியை வகுப்பறையிலிருந்து வெளியே கொண்டு வந்து, பள்ளி நிர்வாகத்தினர் அடித்துக் கொன்றனர். இதனால் பள்ளியில் நாள் முழுவதும் பரபரப்பு நிலவியது.