நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளுக்கு ஊசி போட்டு மருத்துவ சிகிச்சை

கண்ணாடிகண்ணாடி விரியன் பாம்பு Kannaadi viriyan
கண்ணாடி விரியன் பாம்பு Kannaadi viriyan
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 1 நிமிடம்

ஒசூரில் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கொடிய நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளுக்கு ஊசி போட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒசூர் மூக்கண்டப்பள்ளி அருகே ஒரு வீட்டில், ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும்போது 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இயந்திரத்தில் சிக்கியது.

இதில் அந்த பாம்பின் கழுத்து மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து, தகவல் அறிந்து சென்ற விலங்குகள் ஆர்வலர் மாறன், காயமடைந்த அந்த பாம்பினை கைப்பற்றி தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் கால்நடை மருத்துவர் மூலம், காயமடைந்த கண்ணாடி விரியன் பாம்பிற்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல், ஒசூர் கேசிசி குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் நுழைந்த குட்டி நாகப்பாம்பினை வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியே துரத்த கம்பினால் தாக்கியுள்ளனர். இதில் குட்டி நாகப்பாம்புவிற்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. இந்த குட்டி பாம்பினையும் எடுத்து வந்த மாறன், மருத்துவமனையில் எக்ச்-ரே எடுத்து காயமுள்ள பகுதியில் சிகிச்சை அளித்துள்ளார்.

பின்னர், இந்த இரண்டு பாம்புகளையும் தனது இரு சக்கர வற்டியில் எடுத்து சென்று, ஒசூர் அருகேயுள்ள சானமாவு – பேரண்டப்பள்ளி காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்ததாக தெறிவித்தார்.

இந்த செயலை ஏராளமான பொதுமக்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.