நான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருக்கிறேன்: சிரீ ரெட்டி

திருமனமாகாத சென்னை ஆண்களுக்கு அழைப்பு... அவங்க ரெடி... நீங்க ரெடியா சென்னை ஆண்களே?

113
Sri Reddy சிரீ ரெட்டி
Sri Reddy சிரீ ரெட்டி

எனது கடந்த காலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டால் மட்டுமே வாய்ப்பு!

தான் திருமணத்திற்கு ஆயத்தமாக இருப்பதாக நடிகை சிரீ ரெட்டி சென்னை ஆண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர் நடிகை சிரீ ரெட்டி. முதலில் அழகு நிலையம் நடத்தி வந்தார். பின்னர் நண்பர் ஒருவரின் மூலம், ஊடகத் துறையில் நுழைந்தார். அதில் 3 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்தார். இந்த நேரத்தில் சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களை பேட்டி எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

சூர்யாவின் தீவிர ரசிகையாக இருந்து, தற்போது அசித் ரசிகையாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகையாக மாறியுள்ள தமக்கு, தெலுங்கு பட உலகில் அளிக்கப்பட்ட பாலியல் தொந்தரவுகளை, ஊடகங்கள் முன்பு பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அதில் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் பெயரையும் குறிப்பிட்டார்.

இதையடுத்து கோலிவுட் பக்கம் திரும்பி, தமிழ் நடிகர், நடிகை, இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இதனால் தென்னிந்திய திரையுலகம் நாளுக்கு நாள் அதிர்ச்சிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆண் கூட அவரின் குற்றச்சாட்டை மறுத்து பேசவோ அல்லது அறிக்கை விடவோ இல்லை.

சிரீகாந் என்ற தமிழ் நடிகரை குறிப்பிட்டு, அவர் தூ… குடி வல்லவர் (P***** eater) என்றெல்லாம் கேவலமாக கூறிப்பிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தனது கடந்த கால நிகழ்வுகளை அறிந்து, அதில் விரும்பி யாராவது தம்மை ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்து கொள்ளத் ஆயத்தமாக இருப்பதாக சிரீ ரெட்டி கூறியுள்ளார்.