படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

DSC03124Nagaraj of Kiriyaanapalli village near Denkanikottai owns 50 sheeps.  He used to put them in a shelter during night times.

A group of street dogs have entered into the shelter and have killed around 15 sheeps and taken away few from their hunt.

Nagaraj lodged a complaint with forest officials on which they inspected the spot and advised Nagaraj to keep his sheeps safe from dog attacks.

Though Nagaraj requested the officials for compensation, officials shared their inability to provide the same as dog attacks do not have provision to seek c0mpensation from forest department.

 

DSC03125

 

ஒசூர் அருகே வெறிநாய்கள் கடித்து 15 ஆடுகள் பலி

ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டையை அடுத்த கிரியானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் விவசாயியான இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார்.

கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் பட்டி போட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில் இந்த ஆடுகளை நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறின.

இதில் படுகாயமடைந்த ஆடுகள் குடல் வெளியே வந்து அங்கேய உயிரிழந்தது. இதுகுறித்து விவசாயி நாகராஜ் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர், மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.