எகிப்தில் தமிழ் எழுத்துக்கள் Egypt Pottery Tamil Inscription
எகிப்தில் தமிழ் எழுத்துக்கள் Egypt Pottery Tamil Inscription
படிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களும் எகிப்தியர்களும் வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதற்கு சான்றாக எகிப்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உறி பாணை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட பாணை ஒன்றில் “உறி பாணை” என்று இரண்டு பக்கமும் பொறிக்கப்பட்டிருந்தது.

உறி பாணை என்றால், இன்றும் தமிழர்களால் பயண்படுத்தப்படும், கயிற்றில் பின்னிய வலையில் தொங்கவிடப்படும் மண் பாணை.

உறி பாணை Uri Paanai
உறி பாணை Uri Paanai

இன்றும் “உறி அடித்தல்” என்றழைக்கப்படும் விளையாட்டு ஊர்ப்புறங்களில் விளையாடப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் உடைந்த நிலையில், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உறி பாணை ஒன்று ரோமை பேரரசுகள் வாழ்ந்து சென்ற செங்கடல் கடற்கரை ஓரத்தில் உள்ள குசேயர் அல் காடிம் என்றழைக்கப்பட்டும் பழமையான துறைமுகம் அருகே அகழ் ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது.

எகிப்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ் ஆய்வின் போது, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பல பாண்டங்கள் தற்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எகிப்தில் தமிழ் எழுத்துக்கள்
எகிப்தில் தமிழ் எழுத்துக்கள்

லன்டனில் உள்ள பிரிட்டன் அறிங்காட்சியகத்தை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர் முனைவர் ராபர்டா டோம்பர் தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பல பாணைகள், குடுவைகள் மற்றும் பிற பொருட்களை அடையாளம் கண்டுள்ளார்.

எடுக்கப்பட்ட பொருட்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களை அடையாளம் காண, தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் உதவியுடன் அந்த எழுத்துக்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எழுத்துக்கள் என உறுதி படுத்தப்பட்டது.

இதே பகுதியில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அகழ் ஆய்வு செய்த போதும், இத்தகைய தமிழ் எழுத்துக்களுடன் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

எகிப்தில் தமிழ் எழுத்துக்கள் - 2006 ஆம் ஆண்டு வாக்கில் ஓமன் நாட்டின் கொர் ரோரி என்ற பகுதியில்
எகிப்தில் தமிழ் எழுத்துக்கள் – 2006 ஆம் ஆண்டு வாக்கில் ஓமன் நாட்டின் கொர் ரோரி என்ற பகுதியில்

2006 ஆம் ஆண்டு ஓமன் நாட்டின் கொர் ரோரி என்ற பகுதியில் அகழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்பொழுது , ‘நந்தை கீரன்’ என்று தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 2000-ம் ஆண்டுகளுக்கு முந்தைய மண் பாணை உடைசல் கண்டெடுக்கப்பட்டது.

இத்தகைய சான்றுகள் ரோமைய அரசுகளுடன் தமிழ் அரசுகள் கொண்டிருந்த வணிக உறவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.