Temple festival held with galore near Hosur

25
Temple festival near Hosur
Temple festival near Hosur

There is a temple for Mathuramman near Hosur at Uskoor.  The place is in Karunatakam.

Every year, temple festival is held in which Temple cars, decorated used to be taken in procession.

Couple of days before the festival was held.  As the temple has a custom of pulling the cars using bulls, this year too, the cars were pulled with the help of bulls while people followed them.

 

ஓசூர் அருகே உசகூரில் மத்தூரம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஓசூர் அருகே கர்நாடக எல்லையான உசகூரில் பழமை வாய்ந்த மத்தூரம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் தேர்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் தேரை பக்தர்கள் இழுக்காமல் மாடுகளே இழுத்து செல்கிற வழக்கமாக உள்ளது.

தேர்த்திருவிழா நடந்தது:

இதையட்டி 12 தேர்கள் அலங்கரித்து கொண்டு வரப்பட்டன. பிறகு மத்தூரம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதையடுத்து தேர்களை மாடுகள் ஊர்வலமாக இழுத்து வந்தன. 100 அடி உயரம் கொண்ட தேர்களை மாடுகள் இழுத்து வர பக்தர்கள் பின்தொடர்ந்து வந்தனர். சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேர்கள் இழுத்து வரப்பட்டன.

இந்த தேர்கள் அனைத்தும் மத்தூரம்மன் கோவில் அருகில் உள்ள திடலை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் உணவு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் ஆனேக்கல், சர்சாபுரம், சந்தாபுரம், பொம்மசந்திரா, எலக்ட்ரானிக் சிட்டி, உள்பட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.